கனவுகள்

கனவுகள், எப்.அந்தோணிசாமி, அன்னை பதிப்பகம், விலைரூ.75. கிறித்துவ ஆயர்களின் பணிகளையும், அருள்பணியாளரின் பணிகளையும், துறவியரின் பணிகளையும், பொதுவானவர்களின் பணிகளையும் வரையறுத்துத் தெரிவிக்கிற நுட்பமான நுால். கிறித்துவர்களுக்கு மூன்று பிறப்பு இருப்பதாகத் தத்துவார்த்தமாக விளக்குகிறது. அன்னையின் வயிற்றில் பிறக்கும் பிறப்பு, திருமுழுக்குக்குப் பின்னரான பிறப்பு, இறப்புக்குப் பிறகான விண்ணுலகப் பிறப்பு என தெளிவுபடுத்துகிறது. நிகழாத ஒன்றை நிகழ்த்துவதே கனவு என்னும் புதுமையான விளக்கத்தைத் தருகிறது. நம்பிக்கையை விதைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டுள்ளது. கிறித்துவ இறைவாழ்க்கை வாயிலாக நம்பிக்கை பெற்று, உயர்ந்த நிலையை அடைவதற்கான வழியை உணர்த்துகிறது. சிறந்த […]

Read more

உங்களுக்கும் ஒரு குழந்தை

உங்களுக்கும் ஒரு குழந்தை, ஐஸ்வர்யா மகளிர் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம், சென்னை, விலை 300ரூ. குழந்தை இல்லாவிட்டால் வாழ்க்கையில் பெரும் பிரச்சினை ஏற்படுகிறது. தம்பதிகளில் எவரிடம் குறைபாடு இருந்தாலும், முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் குழந்தைப்பேறு அடைய முடியும் என்று கூறும் டாக்டர் சந்திரலேகா, அதற்காக இருக்கும் பல்வேறு நவீன சிகிச்சை முறைகளை தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். புதிதாகத் திருமணம் செய்துகொண்ட பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும், பருவம் அடைந்த பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் நூலாசிரியர் […]

Read more