சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்

சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள், முனைவர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 600ரூ. சைவ சமயம் உலகில் உள்ள எல்லா சமயங்களுக்கும் முற்பட்ட தொன்மையை உடையது. தமிழும், சைவமும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன. சைவத்தமிழின் சிறப்பை பறைசாற்றும் வகையில் 78 கட்டுரைகள் சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள் என்ற நூல் தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது. இதில் சைவத்தமிழ் இலக்கியங்கள், திருமந்திரத்தின் தனிச்சிறப்புகள், சைவத் தமிழ் அறிஞர்கள் ஆகிய தலைப்புகளில் பகுக்கப்பட்டு அறிவு நிறை ஆய்வாளர்களால் படைக்கப்பட்டு இருக்கிறது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் வேறு, […]

Read more

மகாகவியும் இசைப் பேரரசியும்

மகாகவியும் இசைப் பேரரசியும், முனைவர் மு. கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. இசையில் சிகரத்தைத் தொட்டு புகழின் உச்சத்தை அடைந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. மகாகவி பாரதியார் பற்றியும், எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றியும் பேராசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம் இது. மொத்தம் 40 கட்டுரைகள், பாரதியார் பற்றியும், எம்.எஸ். சுப்புலட்சுமி பற்றியும் அறிந்து கொள்ள இந்த ஒரு புத்தகம் போதும். அந்த அளவுக்கு, அந்த இரு மேதைகளையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

வளரும் பேச்சாளருக்கு

வளரும் பேச்சாளருக்கு, முனைவர் மு. கலைவேந்தன், பதிப்பாசிரியர் கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 200ரூ. மேடைப்பேச்சு ஒரு கலை. சிலருக்கு மேடை ஏறினாலே உதறல் எடுக்கும். அச்சத்தைப் போக்கி, மேடைப்பேச்சில் வல்லவர் ஆவதற்கான வழிமுறைகளை இந்நூலில் விளக்குகிறார், முனைவர் மு. கலைவேந்தன். தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோர், சிறந்த மேடைப்பேச்சுக்கு முன்னோடிகள். அதன்பின் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பந்த் ஆகியோர் மேடைத் தமிழை […]

Read more