சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள்
சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள், முனைவர் மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 600ரூ.
சைவ சமயம் உலகில் உள்ள எல்லா சமயங்களுக்கும் முற்பட்ட தொன்மையை உடையது. தமிழும், சைவமும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருக்கின்றன. சைவத்தமிழின் சிறப்பை பறைசாற்றும் வகையில் 78 கட்டுரைகள் சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள் என்ற நூல் தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது.
இதில் சைவத்தமிழ் இலக்கியங்கள், திருமந்திரத்தின் தனிச்சிறப்புகள், சைவத் தமிழ் அறிஞர்கள் ஆகிய தலைப்புகளில் பகுக்கப்பட்டு அறிவு நிறை ஆய்வாளர்களால் படைக்கப்பட்டு இருக்கிறது.
கட்டுரைகள் ஒவ்வொன்றும் வேறு, வேறு கோணத்தில் அமையப்பெற்றுள்ளது தனிச்சிறப்புகும். பயனுள்ள இக்கட்டுரைகளால் சைவமும், தமிழும் தன்னிகரற்று உலகளாவிய பார்வையோடு விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
நன்றி: தினத்தந்தி, செப்டம்பர் 2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818