வளரும் பேச்சாளருக்கு

வளரும் பேச்சாளருக்கு, முனைவர் மு. கலைவேந்தன், பதிப்பாசிரியர் கண்ணகி கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 200ரூ.

மேடைப்பேச்சு ஒரு கலை. சிலருக்கு மேடை ஏறினாலே உதறல் எடுக்கும். அச்சத்தைப் போக்கி, மேடைப்பேச்சில் வல்லவர் ஆவதற்கான வழிமுறைகளை இந்நூலில் விளக்குகிறார், முனைவர் மு. கலைவேந்தன்.

தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோர், சிறந்த மேடைப்பேச்சுக்கு முன்னோடிகள். அதன்பின் அறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம், நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பந்த் ஆகியோர் மேடைத் தமிழை வளர்த்தனர்.

இவர்களுடைய மேடைப்பேச்சின் சிறப்புகளை விவரிப்பதுடன், உதாரணத்துக்கு பல சிறந்த சொற்பொழிவுகளை எடுத்துக்காட்டியுள்ளார் ஆசிரியர்.

நன்றி: தினத்தந்தி, 15/2/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *