வண்டமிழ் வளர்த்த வரதராசனார்

வண்டமிழ் வளர்த்த வரதராசனார், அ. ஆறுமுகம், பாவேந்தர் பதிப்பகம், விலை 120ரூ.

முயற்சியின் வடிவம், முன்னேற்றத்தின் வடிவம், முத்தமிழ் வடிவம் என்றழைக்கப்படும் டாக்டர் மு. வரதராசனார் வரலாறு, வளமான தமிழில் வழங்கப்பட்டுள்ளது. மு.வ.வின் பன்முகத் திறங்களையெல்லாம் சுட்டிக்காட்டியும், தொட்டுக்காட்டியும், நெஞ்சில் பதித்தும் நேயப்பெருக்கு வெளிப்பட வரையப்பட்ட பன்முக நூல்.

நன்றி: தினத்தந்தி, 6/4/2016.

 

—-

வரலாறு பேசும் தமிழகத்து திருக்கோயில்கள், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ.

காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியும், திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகமும் இணைந்து நடத்திய அனைத்துலக அளவிலான திருக்கோவில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் 11-வது ஆய்வு மாநாட்டுக் கருத்தரங்கில் படித்தளிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். தமிழறிஞர்கள், பல்துறைப் பேராசிரியர்கள், புலவர்கள், சமய அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வழங்கிய கட்டுரைகளை திருக்கோவில்களின் அமைப்பும் வரலாறும், திருக்கோவில்கள் மரபும் மாண்பும், புகழ்பெற்ற திருக்கோவில்கள், பெயர் சொல்லும் திருக்கோவில்கள் எனும் நான்கு புரிவுகளில் பல்வேறு ஆய்வுத் தலைப்புகளில் தொகுத்தும், வகுத்தும் பதிப்பித்துள்ளார் கண்ணகி கலைவேந்தன்.

நன்றி: தினத்தந்தி, 6/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *