இந்தியச் சிற்பி ஜவாஹர்லால் நேரு
இந்தியச் சிற்பி ஜவாஹர்லால் நேரு, ஜி. பாலன், வானதி பதிப்பகம், முதல் பாகம் விலை 270ரூ, இரண்டாம் பாகம் விலை 230ரூ.
“மனிதருள் மாணிக்கம்”, “நவ இந்தியாவின் சிற்பி” என்றெல்லாம் புகழ்பெற்ற பண்டித ஜவஹர்லால் நேரு பற்றிய அபூர்வமான புத்தகம். வரலாற்று நூல்களையும், வாழ்க்கை வரலாறுகளையும் எழுதுவதில் புகழ்பெற்ற முனைவர் ஜி.பாலன் இதை எழுதியுள்ளார்.
செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தாலும், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 1041 நாட்கள் சிறையில் கழித்தார், நேரு. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்று, இந்தியாவை பொருளாதாரத்தில் முன்னேறச் செய்து, ஒரு வல்லரசாக மாற்ற வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். அவர் வரலாற்றை சரளமாகவும், மனதைத் தொடும்படியாகவும் எழுதியுள்ளார் முனைவர் பாலன்.
நேருவின் வரலாற்றை மட்டும் அல்ல, சுதந்திப் போராட்டம் பற்றிய அனைத்து விவரங்களையும் அறிய முடிகிறது. நிறைய படங்களும் இடம் பெற்றுள்ளன. நேருவின் திருமண அழைப்பிதழை சிரமப்பட்டு கண்டுபிடித்து, புத்தகத்தில் சேர்த்திருப்பது பாராட்டத்தக்கது. புத்தகம் இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகம் ரூ. 270, இரண்டாம் பாகம் 230ரூ. புத்தகம் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நன்றி: தினத்தந்தி, 13/4/2016.