வெள்ளித்திரையில் அள்ளிய புதையல்
வெள்ளித்திரையில் அள்ளிய புதையல், கவிஞர் பொன். செல்வமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 500ரூ.
சினிமா பற்றிய புத்தகங்களில் இது புதுமாதிரியானது. திரைப்பட பாடல்களை எல்லாம் அலசி ஆராய்ந்த கவிஞர் பொன். செல்வமுத்து, “அழகு” என்று தொடங்கும் பாடல்கள், “ஆசை” என்று தொடங்கும் பாடல்கள், “தமிழ்” என்ற சொல் இடம் பெற்ற பாடல்கள், திருமணம் பற்றிய பாடல்கள் என்று அந்தப் பாடல்களை தொகுத்து தந்துள்ளார். அது மட்டுமல்ல, பாடல் இடம் பெற்ற படம், பாடிய பாடகர்கள் பற்றிய விவரம் ஆகியவற்றையும் தந்துள்ளார். அதுமட்டுமல்ல, “ஒரே ஒரு பாடல் மட்டும் இடம் பெற்ற படம்”, பாடகர் பாடாமல் பாடகிகள் மட்டுமே பாடிய படங்கள்… இப்படி பல்வேறு தலைப்புகளில் சினிமா தகவல்களை அள்ளித் தருகிறார். உண்மையிலேயே இது ஒரு சாதனைதான்.
நன்றி: தினத்தந்தி, 6/4/2016.
—–
ராணி மங்கம்மாள், நா. பார்த்தசாரதி, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 100ரூ.
தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்றக் கலந்த ராணி மங்கம்மாளை நாயகியாக வைத்து பின்னப்பட்ட சரித்திர நாவல். நாயக்கர்கள் காலத்து மதுரை, ராமநாதபுரம், திரிசிரபுரம் ஆகிய பிரதேசங்களின் நிலையையும் நாவலின் மூலம் காணமுடிகிறது. மங்கம்மாவின் ஆட்சியை அறிந்துகொள்ள அருமையான புதினத்தை புனைந்திருககிறார் நாவலாசிரியர் நா. பார்த்தசாரதி.
நன்றி: தினத்தந்தி, 6/4/2016.