வண்டமிழ் வளர்த்த வரதராசனார்

வண்டமிழ் வளர்த்த வரதராசனார், அ. ஆறுமுகம், பாவேந்தர் பதிப்பகம், விலை 120ரூ. முயற்சியின் வடிவம், முன்னேற்றத்தின் வடிவம், முத்தமிழ் வடிவம் என்றழைக்கப்படும் டாக்டர் மு. வரதராசனார் வரலாறு, வளமான தமிழில் வழங்கப்பட்டுள்ளது. மு.வ.வின் பன்முகத் திறங்களையெல்லாம் சுட்டிக்காட்டியும், தொட்டுக்காட்டியும், நெஞ்சில் பதித்தும் நேயப்பெருக்கு வெளிப்பட வரையப்பட்ட பன்முக நூல். நன்றி: தினத்தந்தி, 6/4/2016.   —- வரலாறு பேசும் தமிழகத்து திருக்கோயில்கள், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. காஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியும், திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகமும் இணைந்து நடத்திய அனைத்துலக […]

Read more

நகைச்சுவை மன்னர் கலைவாணர்

நகைச்சுவை மன்னர் கலைவாணர், முனைவர் இராம. இராமகுமார், செம்மூதாய் பதிப்பகம், விலை 60ரூ. கலைவாணர் என்றால், அது என்.எஸ். கிருஷ்ணன் ஒருவரையே குறிக்கும். உலகப் புகழ் பெற்ற மேல் நாட்டு நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினுக்கு இணையானவர். சிரிப்போடு சிந்தனையையும் சேர்த்து வழங்கியவர். ஓடாத படங்களையும் ஓட வைத்தவர். பிற்காலத்தில் போதிய வருமானம் இல்லாத காலத்திலும், கையில் இருப்பதை தானமாக வழங்கிய வள்ளல். அத்தகைய உயர்ந்த மனிதரான என்.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறை, சரளமான நடையில் நெஞ்சைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார், முனைவர் இராம.இராமகுமார். நன்றி: தினத்தந்தி, […]

Read more

தூது வந்த வீரர்

தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், சென்னை, பக். 224, விலை 200ரூ. அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி, வரலாற்று அறிஞர் தாமஸ் கார்லைல் கி.பி. 1840ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு இந்நூல். அதோடு இங்கிலாந்து நாட்டின் பட்டத்து இளவரசர் சார்லஸின் இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற சொற்பொழிவும் இணைக்கப்பட்டுள்ளது. அரேபியத் தீபகற்பத்தின் வரலாற்றுப் பின்னணி, நபிகள் (ஸல்) அவர்களின் வரலாற்றில் உள்ள முக்கிய அம்சங்கள், அவர்களின் மூலம் இறைவன் இவ்வுலகிற்கு அளித்த அல்குர் […]

Read more

மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு

மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு, டாக்டர் செ. சைலேந்திரப்பாபு ஐ.பி.எஸ்., தமிழில். முனைவர் அ.கோவிந்தராஜு பி.எச்.டி., சுரா பதிப்பகம், சென்னை – 600040,  பக்கம்: 226, விலை: ரூ. 150. நூலாசிரியர், ஒரு புகழ் பெற்ற உயர் போலிஸ் அதிகாரி என்பதோடு, மாணவர்கள் பால் மிகுந்த அக்கறை உள்ளவர். மாணவ, மாணவியருக்கு வழிக்காட்டும் விதத்தில், அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Boys & Girls be ambitious’ என்ற நூலின் தமிழாக்கமே இந்த நூல். வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, பாடங்களை […]

Read more

மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி?

மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி? (ஆசிரியர்: ஏ.கே.சேஷய்யா; வெளியீடு: உஷா புத்தக நிலையம், 1, நரசிம்மன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33: விலை:ரூ. 42. மன அழுத்தம் காரணமாக கோபம், பொறாமை, எரிச்சல், உண்டாகின்றன். மன அழுத்தம் இன்றி அமைதியாக வாழ எளிதாக கடைபிடிக்கும் வழிகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. ——   தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம், ஆசிரியர்: முனைவர் அ.ஆறுமுகம், வெளியிட்டோர்: பாவேந்தர் பதிப்பகம், ’சீரகம்’, 4/79 நடுத்தெரு, திருமழபாடி, அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம்; விலை: […]

Read more