மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு
மாணவனே மாணவியே சாதிக்க ஆசைப்படு, டாக்டர் செ. சைலேந்திரப்பாபு ஐ.பி.எஸ்., தமிழில். முனைவர் அ.கோவிந்தராஜு பி.எச்.டி., சுரா பதிப்பகம், சென்னை – 600040, பக்கம்: 226, விலை: ரூ. 150.
நூலாசிரியர், ஒரு புகழ் பெற்ற உயர் போலிஸ் அதிகாரி என்பதோடு, மாணவர்கள் பால் மிகுந்த அக்கறை உள்ளவர். மாணவ, மாணவியருக்கு வழிக்காட்டும் விதத்தில், அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Boys & Girls be ambitious’ என்ற நூலின் தமிழாக்கமே இந்த நூல். வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, பாடங்களை படிக்க என்னென்ன வழிகள், அச்சத்தைப் போக்கிக் கொள்வது எப்படி என்று, பல உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார். நன்றி: தினமலர்,(24-03-2013).
—-
தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ( ஆசிரியர்: முனைவர் அ.ஆறுமுகம், வெளியிட்டோர்: பாவேந்தர் பதிப்பகம், ’சீரகம்’, 4/79 நடுத்தெரு, திருமழபாடி, அரியலூர் வட்டம், அரியலூர் வாவட்டம்; விலை: ரூ.120)
அரியலூர் மாவட்டத்தை ஆண்ட மன்னர்கள் மாவட்டத்தில் இருந்த தமிழ் சங்கங்கள் அவை தமிழை வளர்த்த விதம் போன்ற அரிய தகவல்களை கொண்ட நூல். தமிழ்நாட்டின் 31-வது மாவட்டமான அரியலூர் பண்டைய கால புதைபொருள் பொக்கிஷமாக விளங்கியதை ஆசிரியர் முனைவர் அ.ஆறுமுகம் உணர்த்தியிருப்பது அருமை. வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. நன்றி: தினத்தந்தி (6.3.2013).
—-
சூரியநிலவன்,ஆசிரியர்: தஞ்சை எஸ்.ராஜவேலு; வெளியிட்டோர்: கிரிஜா பதிப்பகம், பிளாட் எண். 36, சக்தி நகர், மானோஜிப்பட்டி, தஞ்சாவூர்-4; விலை ரூ270.
விஷ்ணுவர்த்தன் என்று அழைக்கப்பட்ட சோழமன்னன் குலோத்துங்கன் காலத்தில் நடந்த சம்பவங்களுடன் கற்பனையை கலந்து இந்த வரலாற்று நவீனம் எழுதப்பட்டுள்ளது. சோழர் வரலாற்று பின்னணியை அடிப்படையாக வைத்து உருவான இந்த நவீனத்தில் சரித்திர சான்றுகளும் சுவையான கற்பனை சம்பவங்களும் படிப்பதற்கு ஆவலை தூண்டும் வகையில் அமைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி (6.3.2013).