தமிழ் இன்பம்
தமிழ் இன்பம், சொல்லின் செல்வர், ரா.பி. சேதுப்பிள்ளை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்கம்: 192, விலை: ரூ.105. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-4.html
’செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை’ என்று ஆன்றோரால் புகழப்படும், சொல்லின் செல்வரின் அருமையான நூல் இது. என்று, எப்பொழுதும் படித்தாலும் இனிக்கும் தமிழில், இன்பம் தரும் நூல் எனலாம். இந்நூல், தமிழ் ஆர்வலர்களுக்கு ஒர் கையேடு என்று கூறலாம். ’திண்டிவனம்’ என்ற சொல்லிற்கு, ‘புளியங்காடு’ என்ற பொருள் என்றும் (பக்.17), ’ஒப்பிலியப்பனே – உப்பிலியப்பன்’ என்று மருவியது என்றும் (பக்.145), ‘பந்தல்’ என்ற மேன்மையான சொல், செட்டி நாட்டிலே அமங்கலச் சொல்லாகக் கருதப்படுகிறது என்றும், (பக்.56) விளக்கி, நமக்குத் தமிழ் இன்பம் வாரி வழங்கும் அறிஞர். ரா.பி.சேதுப்பிள்ளையின் இந்நூல் அன்னார்க்கும் பெருமை கூட்டிய நூல் என்பர். அனைவரும் படித்து, இன்பம் பெற வேண்டிய நூலாகும். நன்றி: தினமலர் சென்னை (24-03-2013).
—-
டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம், மு.நீலகண்டன், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை -600 098, விலை: ரூ. 185. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-918-9.html
டாக்டர் அம்பேத்கர் மாமேதை, பொருளாதாரம், சட்டம், சமூக பிரச்னைகள் குறித்து, அவர் தெரிவித்த கருத்துக் கட்டுரைகள் சிலவற்றை தேர்வு செய்து அவற்றை எளிதாக்கி, அதன் விளக்கத்தையும் ஆசிரியர் எழுதியிருப்பது சிறப்பான முயற்சி. இன்று எல்லாரும் சாதி பற்றி பேசுகின்றனர். அம்பேத்கர் தன் கட்டுரையில்,”சாதியைப் பற்றி ஆராய வந்தவர்கள் புரிந்த,பல்வேறு தவறுகளால் அவர்களின் ஆய்வுப் போக்கில், வழி தவறி உள்ளனர்” என்கிறார். ஆரிய திராவிடக் கருத்துக்களில் இந்திய மக்கள் கவலைப்படதில்லை. தோலின் நிறத்திற்கும் இந்தியா முக்கியத்துவம் தந்ததில்லை என்று தெளிவாக்கியுள்ளார். அதைவிட , “இந்துக்களுக்குள்ளே பல்வேறு வித்தியாசங்கள், வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்களிடம் ஆழ்ந்த பண்பாட்டு ஒற்றூமை உள்ளது.” என்று கூறி , அதை அவர் பல்வேறு கோணங்களில் அலசியதை பார்க்கும் போது அக்கருத்துக்களை ஊன்றிப் படிப்போருக்கு பிரமிப்பு ஏற்படும். அம்பேத்கரின் சிறப்பை மேலும் அறிய உதவும் நூல். நன்றி: தினமலர் (24-03-2013).