மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி?
மன அழுத்தம் ஏற்படாமல் அமைதியாக வாழ்வது எப்படி? (ஆசிரியர்: ஏ.கே.சேஷய்யா; வெளியீடு: உஷா புத்தக நிலையம், 1, நரசிம்மன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 33: விலை:ரூ. 42.
மன அழுத்தம் காரணமாக கோபம், பொறாமை, எரிச்சல், உண்டாகின்றன். மன அழுத்தம் இன்றி அமைதியாக வாழ எளிதாக கடைபிடிக்கும் வழிகள் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
——
தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம், ஆசிரியர்: முனைவர் அ.ஆறுமுகம், வெளியிட்டோர்: பாவேந்தர் பதிப்பகம், ’சீரகம்’, 4/79 நடுத்தெரு, திருமழபாடி, அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம்; விலை: ரூ.120.
அரியலூர் மாவட்டத்தை ஆண்ட மன்னர்கள் மாவட்டத்தில் இருந்த தமிழ் சங்கங்கள் அவை தமிழை வளர்த்த விதம் போன்ற அரிய தகவல்களை கொண்ட நூல். தமிழ்நாட்டின் 31-வது மாவட்டமான அரியலூர் பண்டைய கால புதைபொருள் பொக்கிஷமாக விளங்கியதை ஆசிரியர் முனைவர் அ.ஆறுமுகம் உணர்த்தியிருப்பது அருமை. வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.
——
சூரியநிலவன், ஆசிரியர்: தஞ்சை எஸ்.ராஜவேலு; வெளியிட்டோர்: கிரிஜா பதிப்பகம், பிளாட் எண். 36, சக்தி நகர், மானோஜிப்பட்டி, தஞ்சாவூர்-4; விலை ரூ270.
விஷ்ணுவர்த்தன் என்று அழைக்கப்பட்ட சோழமன்னன் குலோத்துங்கன் காலத்தில் நடந்த சம்பவங்களுடன் கற்பனையை கலந்து இந்த வரலாற்று நவீனம் எழுதப்பட்டுள்ளது. சோழர் வரலாற்று பின்னணியை அடிப்படையாக வைத்து உருவான இந்த நவீனத்தில் சரித்திர சான்றுகளும் சுவையான கற்பனை சம்பவங்களும் படிப்பதற்கு ஆவலை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.
——
ஆனந்த வாழ்வு தரும் ஆன்றோர் அருள்நெறி (ஆசிரியர்: முனைவர் வே.தமிழரசு; வெளியீடு: அருள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, என்.ஜி.ஆர். நகர், சென்னை – 78: விலை: 210)
திருமூலர், திருவள்ளுவர், ஆதிசங்கரர், நாயன்மார் நால்வர், பகவத்கீதை, சித்தர்கள், விவேகானந்தர், ஸ்ரீரமண மகரிஷி, வள்ளலார் போன்ற ஆன்றோர்களின் அருள்மொழிகள் கூறப்பட்டுள்ளன.
——
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிக சாதனைகளும் உபதேசங்களும் , தொகுத்தது: சுவாமி விவேகானந்தர் விழித்தெழு பிரசாரக்குழு; புத்தகம் கிடைக்கும் இடம்: டெக்னோ புக்ஹவுஸ், 19 பந்தர் தெரு, முதல் மாடி, சென்னை – 1; விலை: ரூ.80.
ஏற்கனவே வெளிவந்த நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆன்மிக சாதனைகளும், உபதேசங்களும் இந்நூலில் உள்ளன. நன்றி: தினத்தந்தி (6.3.2013).