தியாக தீபம் (மகாத்மா காந்தி கொலை வழக்கு)
தியாக தீபம் (மகாத்மா காந்தி கொலை வழக்கு), வெளியிட்டோர்: வசந்தா பதிப்பகம், புதிய எண் 26, குறுக்குத் தெரு, சோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை – 88. விலை: ரூ.250. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-8.html
மகாத்மா காந்தியின் கொலை வழக்கு விசாரணையை தியாக தீபம் என்ற நூல் மூலம் அனைவரும் அறியும் வகையில், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ச.மோகன் எழுதி உள்ளார்.சட்டமேதையான நூலசிரியர், நாட்டுக்கு சாதனை மிக்க தீர்ப்புகளை வழங்கியதுடன், சிறந்த கவிஞராகவும், நாவலாசிரியராகவும், சிந்தனையாளராகவும், ஆற்றல மிகுபேச்சாளராகவும், திகழ்பவர். இவர் எழுதிய இந்த நூலில், கொலையாளி பேசுவது, வக்கீல் வாதம், தீர்ப்பு, மேல்முறையீடு, இறுதித்தீர்ப்பு, தூக்குமேடை உள்பட 30 தலைப்புகளில் காந்தியின் கொலை வழக்கு விசாரனைத் தகவல்கள் விரிவாக இடம் பொற்றுள்ளன. அத்துடன் மகாத்மா தங்கி இருந்த பிர்லா மாளிகை, காந்தி சுடப்பட்டு விழுந்த இடம் மற்றும் காந்தியின் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ள. இதனை நூல் என்று கூறுவதை விட பொக்கிஷம் என்றே கூறலாம். உண்மையும், கொல்லாமையும் ராஜ்காட்டில் புதைக்கப்பட்டாலும், தியாகத்தின் வேள்வியில் ஏறப்பட்ட தீபம் என்பதால், இந்த மாபெரும் தியகத்தின் சுடர் உலகம் உள்ளளவும் எரிந்து கொண்டே இருக்கும். இதுவே தியாக தீபம் என்று நூலாசிரியர் கூறியுள்ள வரிகள் நெஞ்சை தொடுவதாக உள்ளன. மகாத்மா காந்தி கொலை பற்றி அறிந்து கொள்ள இந்தப்புத்தகம் ஒரு சிறந்த ஆவணமாகும். நன்றி: தினத்தந்தி (6.3.2013).
—–
சீறா வசன காவியம், வெளியீடு: கல்தச்சன் பதிப்பகம், 21, மேயர் சிட்டிபாபு தெரு, திருவேட்டீஸ்வரன்பேட்டை, திருவல்லிக்கேணி, சென்னை-5, விலை: ரூ.850.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களுள் மிகவும் பரவலாக அறியப்பட்ட நூல், உமறுப்புலவரின் “சீறா வசன காவியம்”. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காயல்பட்டினம் கண்ணகுமது முகம்மது புலவர், சீறாப்புராணத்தை உரைநடையில் எழுதி “சீறா வசன காவியம்” என்ற பெயரில் வெளியிட்டார். சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நூலின் அரிய பிரதியைத் தேடி எடுத்து, சென்னை புதுக்கல்லூரி துணைப்பேராசிரியர் முரளி அரூபன் மறுபதிப்பு செய்து நம் கரங்களில் தவழ விட்டிருக்கிறார். பல்வேறு சிரமங்களுக்கு இடையே நீண்ட உழைப்பை நல்கி, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். நன்றி: தினத்தந்தி (6.3.2013).
—–
சென்னையின் 300 ஆண்டு வரலாறு, வெளியிட்டோர்: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2, விலை: ரூ.100.
முன்பு மதராசபட்டினம் என்று அழைக்கப்பட்ட “மெட்ராஸ்”, இப்போது சென்னை என்றே அழைக்கப்படுகிறது. சென்னையின் 300 ஆண்டு கால வரலாறை “ மதராசபட்டினம் to சென்னை” என்ற பெயரில் சுவைபட எழுதியுள்ளார், பார்த்திபன். இந்தப் புத்தகத்தின் விசேஷ அம்சம் என்னவென்றால், அந்தக்காலத்து சென்னை நகரம் எப்படி இருந்தது என்பதை விளக்கும் புகைப்படங்கள்தான். மரங்கள், சைக்கிள்கள் காட்சி மவுண்ட் ரோடு, படகுகள் பவனி வரும் அன்றைய கூவம், கட்டுமரங்களுடன் மெரினா கடற்கரை… இப்படி ஆச்சரியமான காட்சிகள் கொண்ட புகைப்படங்கள் நிறைய உள்ளன. பார்க்கவும், படிக்கவும் அருமையான புத்தகம். நன்றி: தினத்தந்தி (6.3.2013).