திருக்குறள் உவமைகள்
திருக்குறள் உவமைகள், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை – 40. விலை: ரூ. 50.
கடலில் மூழ்கி முத்தெடுப்பது போல, 1330 திருக்குறள் பாக்களையும் ஆராய்ந்து, 150 – க்கு மேற்பட்ட உவமைகளைத் தொகுத்துத் தந்துள்ளார், முல்லை பி.எல்.முத்தையா. பாராட்ட வேண்டிய படைப்பு. விலை: ரூ.50. மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர் எழுதிய ஐந்து நீதிக்கதைகளை, மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர் நீதிக்கதைகள் என்ற பெயரில் எளிய நடையில் நூலாக வெளியிட்டுள்ளார், முல்லை முத்தையா. விலை: ரூ.35.
—–
சிறு தொழில் தொடங்கும் வழிமுறைகள், தி. ஜனநாயகம், சோலைப் பதிப்பகம், 6, பழனியாண்டவர் கோயில் தெரு, பெரம்பூர், சென்னை-11; விலை:ரூ.60.
சிறு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் உடையவர்கள் பலர், எனினும் அதற்கான நடைமுறைகள், சட்ட விதிகள் முதலியவை தெரியாத காரணத்தால், அவர்கள் தங்கள் முயற்சியை ஒத்திப்போடுகிறார்கள்; அல்லது கைவிடுகிறார்கள். அவர்களுக்கு உதவும் அருமையான கையேடு இந்த புத்தகம். சிறு தொழிற்சாலை நிறுவ இடத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி, அலுவகத்தைப் பதிவு செய்தல், உற்பத்தியான பொருளை சந்தைப்படுத்துதல் எப்படி… இத்தகைய விவரங்கள் முழுமையாக இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.
—–
வள்ளுவரின் வித்தியாசமான பார்வைகள்,தி.கலியராஜன்; மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை – 17, விலை ரூ.100.
திருவள்ளுவர் உலகிற்கு தந்த உன்னத திருக்குறளின் சில குறள்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் விமர்சிப்பது படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஒவ்வொரு திருக்குறளுக்கும் ஒரு சிறுகதை அல்லது தற்போதைய அரசியலுடன் தொடர்புபடுத்தி விளக்கி இருப்பது தனிச்சிறப்பு. நன்றி: தினத்தந்தி (6.3.2013).