தூது வந்த வீரர்
தூது வந்த வீரர், ஏம்பல் தஜம்முல் முகம்மது, நியூலைட் புக் சென்டர், சென்னை, பக். 224, விலை 200ரூ.
அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி, வரலாற்று அறிஞர் தாமஸ் கார்லைல் கி.பி. 1840ஆம் ஆண்டு ஆற்றிய சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு இந்நூல். அதோடு இங்கிலாந்து நாட்டின் பட்டத்து இளவரசர் சார்லஸின் இஸ்லாமும் மேற்கு நாடுகளும் என்ற சொற்பொழிவும் இணைக்கப்பட்டுள்ளது. அரேபியத் தீபகற்பத்தின் வரலாற்றுப் பின்னணி, நபிகள் (ஸல்) அவர்களின் வரலாற்றில் உள்ள முக்கிய அம்சங்கள், அவர்களின் மூலம் இறைவன் இவ்வுலகிற்கு அளித்த அல்குர் ஆனின் கலப்படமற்ற தூயதன்மை, 1400 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் உண்மைகள், நபி (ஸல்) அவர்களின் புனிதப் பண்பு ஆகியவற்றை விவரித்து, சரித்திரமும், ஆன்மீகமும், விஞ்ஞானமும் இணைந்ததே இஸ்லாம் என்று சான்றுகளோடு நிறுவப்பட்ட நூல். இஸ்லாம் சமூகத்தைச் சாராத சகோதர்களும் படித்து சமூக நல்லிணக்கம் தழைக்க உதவும் நூல். நன்றி: குமுதம், 19/1/2015.
—-
திருக்குறள் தெளிவும் கருத்தும், பாவேந்தர் பதிப்பகம், அரியலூர் மாவட்டம், விலை 120ரூ.
திருக்குறளுக்கு புதிய முறையில் உரை எழுதியுள்ளார் முனைவர் அ.ஆறுமுகம். முதலில் திருக்குறளுக்கு விரிவான தெளிவுரையும், பிறகு ஒரே வரியில் அதன் கருத்தும் கொடுக்கப்பட்டுள்ளத. பாராட்டத்தக்க சிறந்த முயற்சி. நன்றி: தினத்தந்தி, 22/4/2015.