உலக மதங்கள்

உலக மதங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 208, விலை 175ரூ.

உலகில் பல்வேறு மதங்கள் தோன்றி, மக்களால் அவை பின்பற்றப்பட்டு வந்தாலும், இந்த மதங்கள் அனைத்துமே ஒற்றுமை, அமைதி, அன்பு போன்ற நல்ல விஷயங்களை வலியுறுத்துகின்றன. தனக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்றிருப்பதை மனிதன் நம்புகிறான். அவற்றை எடுத்துரைக்கும் இறைத்தூதர்கள் அல்லது தீர்க்கதரிசிகளின் கருத்துக்களை ஏற்று மனிதன் நடப்பதாலும், அம்மதங்கள் நிலைத்திருக்கின்றன.

அந்த வகையில், இந்நூலாசிரியர் இவ்வுலகிலுள்ள முக்கிய மதங்களைப் பற்றியும், அவை எப்படி, யாரால், எப்போது, எதற்காக தோற்றுவிக்கப்பட்டன என்றும், அவற்றின் ஆன்மிகக் கொள்கைகள் என்ன? இம்மதங்கள் உலகில் எப்படி பரவின? எந்தெந்த நாடுகளில் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்? எந்தெந்த மதத்தில் என்னென்ன விதமான வழிபாடுகள், கலாசார வாழ்க்கை முறைகள் போதிக்கப்படுகின்றன… என்று பல்வேறு விபரங்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

உலகளவில் பல மதங்கள் இருந்தாலும், அவற்றில் பிரபலமான மதங்கள் என்று கிறிஸ்தவம், இஸ்லாம், ஹிந்து, பௌத்தம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அவற்றை இந்நூல் விரிவாக அலசியுள்ளது. இது தவிர, யூத மதம், சமணம், சீக்கிய மதம், பார்சி மதம், டாவோயிஸம், கன்ஃபூசியனிஸம், ஹிண்டோயிஸம், பஸாய் மதம்… என்று பல்வேறு மதங்கள் பற்றி 21 அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளன. இந்நூலாசிரியரின் கருத்தில் ஒரு சில தவறுகள் காணப்பட்டாலும், அம்மதங்களைப் பற்றிய பொதுவான பல கருத்துக்கள் இந்நூலின் மூலம் அறிந்து கொள்ள முடிவது வரவேற்கத்தக்கது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 20/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *