காந்தி எனும் மனிதர்

காந்தி எனும் மனிதர், மிலி கிரகாம் போலக், சர்வோதய இலக்கியப் பண்ணை, பக். 144, விலை 100ரூ. இந்நூலாசிரியர், லண்டனைச் சேர்ந்தவர். இவரது கணவர் ஹென்றி போலக் தென்னாஃபிரிக்காவில் காந்தி ஜியுடன் பல ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்து, தென்னாஃபிரிக்க வாழ் இந்தியர்களுக்காகப் போராடியவர். இந்தியாவிலும் காந்திஜியுடன் இருந்து பல போராட்டங்களிலும் பங்கேற்றவர். இந்நூலாசிரியர் காந்திஜி மீது அளவிலா நேசம் கெண்டவர். ஆனாலும், காந்திஜியின் சில செயல்பாடுகள் குறித்து, தனக்கு தோன்றிய விமர்சனக் கருத்துகளையும் நேருக்கு நேர் கேட்டு வாதம் செய்தவர். இந்நூலாசிரியருக்கும், காந்திஜிக்கும் […]

Read more

அவளுக்கு வெயில் என்று பெயர்

அவளுக்கு வெயில் என்று பெயர், தமிழச்சி தங்கப்பாண்டியன், உயிர்மை பதிப்பகம். அப்பாவின் எதிர்நீச்சல் துவங்குவது எங்கே? தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுதிய ‘அவளுக்கு வெயில் என்று பெயர்’ கவிதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இலக்கியம் தெரியாதோரும், சாதாரணமாக வாசிப்பு பழக்கம் உள்ளோரும் புரிந்து கொள்ளும் எளிய வார்த்தைகளைக் கையாண்டு, கவிதைகளை எழுதி உள்ளார். ‘என் மண்ணில் இல்லாத செழுமை வேறு எங்கும் இல்லை’ என்ற மண்ணின் மீது கொண்ட செருக்கு, ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுகிறது. கவிதைத் தொகுப்புக்கு வெயில் என ஏன் […]

Read more

குறுந்தொகை மலர்கள்

குறுந்தொகை மலர்கள், ப. அநுராதா, ரமணி பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. புலி புலி என்று கூவினால் பூக்கள் உதிரும்! சங்க இலக்கியங்களில் ‘நல்ல குறுந்தொகை’ எனும் சிறப்பான அடைமொழியைப் பெற்ற குறுந்தொகையில் காணப்படும் மலர்கள் குறித்து விவரிப்பதுதான் இந்த நூல். குறுந்தொகையில், அடும்பு துவங்கி வேம்பு வரை, 46 மலர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அந்த மலர்களது அகர வரிசைப்படி ஒவ்வொரு மலரையும், மலர் குறித்த தாவரவியல் கருத்து, தாவரவியல் பெயர், மலர் இடம் பெறும் பாடல் எண்வரி, புலவரின் பெயர், பாடல் […]

Read more

நடந்தது நடந்தபடி

நடந்தது நடந்தபடி, ஆங்கிலத்தில் பி.வி.ஆர்.கே. பிரசாத், தமிழில் துறவி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 272, விலை 205ரூ. முதல்வராகும் வாய்ப்பை இழந்த ரஜினிகாந்த்! வீங்ஙல்ஸ் பிகைஷ்ட் தி வீல்… பி.எம்., சி.எம்., அண்டு பியாண்டு’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம்தான் இந்த நூல். நூலாசிரியர், பி.வி. நரசிம்மராவ், பிரதமராக இருந்தபோது, மத்திய அரசின் செய்தித்துறை ஆலோசகராக பணியாற்றியவர். தமிழக அரசியலில் நடந்த, ஒரு மாற்றத்தை பற்றி விரிவாக எழுதுகிறார். 1996, தமிழக சட்டசபை தேர்தல் நேரம். அ.தி.மு.க. மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி. […]

Read more

காசியும் கங்கையும்

காசியும் கங்கையும், மு. ஸ்ரீனிவாசன், அருள் பதிப்பகம், பக். 168, விலை 120ரூ. இந்திய கலாசாரத்தில், வரலாற்றில், சமய வாழ்வில், இலக்கியத்தில், மக்கள் சிந்தனையில் என அனைத்திலும் இடம் பெற்றுள்ள விஷயங்களில், காசியும் கங்கையும் குறிப்பிடத்தக்கவை. 1950களில் காசியில் கங்கையின் ஒரு கரையில் மக்கள் நீராட, மறுகரையில் நீர்யானைகளும் டால்பின்களும் மூழ்கி எழுந்த காலமாக இருந்தது. உலகின் முதல் நூலாக கருதப்படும் ரிக்வேதத்தில் காசியைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. காசி, கங்கை பற்றி வேத, புராண, இதிகாச, இலக்கியங்களில் வரும் குறிப்புகள் அனைத்தையும் நூலாசிரியர் தொகுத்து, […]

Read more

தெய்வம் தந்த தமிழ்

தெய்வம் தந்த தமிழ், முனைவர் மா.கி. ரமணன், பூங்கொடி பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. உலகின் எந்த மொழியையும் கடவுள் படைத்ததாகவோ, கடவுள் கவிதை எழுதி, இலக்கணம் எழுதி வளர்த்ததாகவோ வரலாறு இல்லை. ஆனால், தமிழுக்கு அத்தகு தனிப்பெருமையும் சிறப்பும் உண்டு. இறைவனே, இறையனார் அகப்பொருள் இலக்கணத்தை வழங்கியது, முதற் சங்கத்தில் அமர்ந்து தமிழாய்ந்தது, தருமிக்காக பாடல் எழுதி கொடுத்தது, சுந்தரர், சேக்கிழாருக்கு முதலடி எடுத்துக் கொடுத்து பாடச் சொன்னது ஆகியவை, நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அதேபோல், முருகப் பெருமான் தன் அடியவருக்கு […]

Read more

இயற்கை வேளாண்மை

இயற்கை வேளாண்மை, வீ. அன்பழகன், ச. இஞ்ஞாசிமுத்து, கண்ணதாசன் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகளில் தலையாயது பூச்சிகள். பாடுபட்டு வளர்த்த பயிரையும், மகசூலையும் பதம் பார்க்கும் பூச்சிகள் விவசாயத்திற்கு எதிரிகளாகத்தான் இருந்து வருகின்றன. அவற்றிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காகவே அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த பூச்சிக் கொல்லி மருந்துகள் அனைத்தும், பூச்சிகளை கொல்கிறதோ இல்லையோ, கட்டாயம், தானயிங்களையும், காய்கறிகளையும் சாப்பிடும் மக்களையும் பதம் பார்க்கிறது. இதற்கு மாற்றாகதான், இயற்கை வேளாண்மையில், பூச்சிக் கொல்லிகளுக்கு பதிலாக பூச்சி […]

Read more

மனோதிடம்

மனோதிடம், பன்னாலால் படேல், தமிழில் ந. சுப்பிரமணியன், சாகித்ய அகாடமி, பக். 608, விலை 375ரூ. குஜராத்தில், மிகச்சிறந்த எழுத்தாளராக மதிக்கப்பெறும் பன்னாலால் எழுதிய ‘மாலேல ஜீவ்’ என்னும் இந்த நாவல் ஞான பீட விருதுபெற்றது. குஜராத்தில் 1900ல் நிகழ்ந்த கடுமையான பஞ்சம்தான் நாவலின் பின்புலம். கதாநாயகன் காலு, கதைத் தலைவி ராஜு இடையிலான காதல், நாவலின் மையம். அவர்களின் திருமணம் தடைபட்டதை வைத்து கதை பின்னப்பட்டுள்ளது. அவர்களின் திருமணத்தைத் தடுக்க முனைந்து அதில் வெற்றி காண்கிறது ஒரு குடும்பம். காலுவின் கிராமத்தில் கடும் […]

Read more

இது மடத்துக் குளத்து மீனு

இது மடத்துக் குளத்து மீனு, ஹாஜகான், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 215ரூ. மிதக்கும் நினைவுகள் சுயசரிதைக்கு இணையான பொறுப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டிருக்கிறது இந்த நினைவலைகள் தொகுப்பு. ஷாஜகான், தான் படித்து ரசித்தது, தான் அவமானப்பட்டது, தான் பாராட்டப்பட்டது அனைத்தையும் எளிமையான நடையில் பதிவு செய்திருக்கிறார். சாலை விபத்துகள், ‘தூல் கா ஃபோல்’ இந்திப் படப் பாடல், கடித இலக்கியம், தாராபுரத்தில் உள்ள சித்தி வீடு, கணக்கு வாத்தியார்… என்று அவரது நினைவலைகளில் மிதக்கும் தகவல்கள் சுவையான டைரிக் குறிப்புகளாகச் சுவையூட்டுகின்றன. -மானா. நன்றி: […]

Read more

ஹாஸ்ய வியாசங்கள்

ஹாஸ்ய வியாசங்கள், பம்மல் சம்பந்த முதலியார், சந்திரா பதிப்பகம், பக். 64, விலை 50ரூ. தமிழ்நாடகத் தந்தை என்று புகழப்படும் மறைந்த பம்மல் சம்பந்த முதலியாரின் நகைச்சுவைத் திறனுக்கு, பிற்காலத்தில் திரைப்படமாகவும் வெளிவந்த ‘சபாபதி’ மிகச் சிறந்த சான்று. அவர் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகளின் தொகுப்பான ஹாஸ்ய வியாசங்கள் (முதல் பதிப்பு 1937) தற்போது மறுபதிப்பு கண்டுள்ளது. 12 கட்டுரைகள் கொண்ட சிறிய புத்தகம்தான். ஆனால் நகைச்சுவை வீரியம் அதிகம். தண்ணீர் இல்லாத நீச்சல்குளம் (அக்காலத்திலும் இப்படித்தானா?) உள்ளிட்ட சென்னையின் விநோதங்களை முதல் கட்டுரை […]

Read more
1 2 3 4 8