புதிய பூமி சூடான சூரியன்

புதிய பூமி சூடான சூரியன், பேரா.சோ.மோகனா, அறிவியல் வெளியீடு, விலை 60ரூ. பூமி பற்றியும் சூரியன் பற்றியும் அறிவயல் பூர்வமான உண்மைகளை, அறிவியல் அறிஞர்கள் கண்டு பிடித்துச் சொன்னதை, நூலாசிரியர் எளிய மொழியில் தந்துள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.   —- மெரிவின் நூல்களின் மதிப்பும் மாண்பும், மெர்வின் வெளியீடு, பக். 112, விலை 50ரூ. வாழும்போதே சமுதாயத்திற்காக நல்ல நூல்களை எழுதி, அதனை மதிப்பீடும் செய்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 28/3/2016.

Read more

உன்னை நீ மறந்ததேன்?

உன்னை நீ மறந்ததேன்?, அ. கீதன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 168, விலை 100ரூ. ஒரு தனிமனிதனின் வாழ்க்கைத் தேடல்கள், சவால்கள், ஆன்மிக விழிப்புணர்ச்சி இவை யாவும் ஒரு மனோதத்துவ நிபுணரின் எழுத்துக்களாக பிரதிபலிக்கின்றன. நன்றி: குமுதம், 28/3/2016.   —- பள்ளு இலக்கியமும் சமுதாயப் பார்வையும், முனைவர் அகிலா சிவசங்கர், தாரிணி பதிப்பகம், பக். 220, விலை 250ரூ. 17,18ம் நூற்றாண்டின் உழவர்கள், அவர்களின் உழைப்பு, களிப்பு, பக்தி என்று கழிந்த அவர்களின் வாழ்க்கை முறைக்கே உரிய நெறிமுறைகளை எடுத்துக்காட்டும் ஆய்வு நூல். […]

Read more

பேருந்து

பேருந்து, ஹரணி, கே.ஜி. பப்ளிகேஷன்ஸ், பக். 120, விலை 120ரூ. தன் பயண வாழ்வின் ஒரு பகுதியாக அன்றாட வாழ்வில் அலையும் மக்களின் அவலங்களை மனிதமன ஓட்டங்களை நாவலாக பதிவு செய்துள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.   —- டிஜிட்டல் வாழ்க்கை, பத்மினி பட்டாபிராமன், தென்றல் நிலையம், பக். 208, விலை 150ரூ. டிஜிட்டல் துறையில் நவீனமாகிவரும் தொழில் நுட்பங்களை, மீடியா மாணவர்களுக்கு உதவும் வகையில் எழுதியுள்ளார். நன்றி: குமுதம், 28/3/2016.

Read more

தமிழாய்வு: தடங்களும் தளங்களும்

தமிழாய்வு: தடங்களும் தளங்களும், முனைவர் சு. தமிழ்வேலு, விலை 250ரூ. தமிழ்நாட்டில் நடைபெற்ற கருத்தரங்குகளில், 65 தலைப்புகளில் சமர்ப்பிக்கப்பட்ட 1402 கட்டுரைகள் பற்றிய பட்டியல் (கட்டுரை ஆசிரியர், கட்டுரையின் தலைப்பு, ஆண்டு முதலிய விவரங்கள்), இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஆய்வாளர்களுக்கு பயன்படும். நன்றி: தினத்தந்தி, 23/3/2016.   —- வில்லங்கம் இல்லாமல் வீட்டு மனை வாங்கி வீடு கட்டுவது எப்படி, ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 170ரூ. மனை வாங்குதல், அதன் பிறகு பத்திரம் பதிவு செய்தல், பட்டா பெறுதல் போன்ற அனைத்து […]

Read more

பழனி வரலாற்று ஆவணங்கள்

பழனி வரலாற்று ஆவணங்கள், செ. இராசு, கொங்கு ஆய்வு மையம், விலை 200ரூ. இந்த நூலில் பழனிமலை சுப்பிரமணியர் (முருகன்) கோயில், பெரியாவுடையார் கோவில் ஆகியவற்றில் உள்ள கல்வெட்டுக்களையும், பழனிமலை அடிவாரத்தில் உள்ள பல மடங்களைச் சேர்ந்த செப்புப் பட்டயம் ஆகிய ஆவணங்களையும் தொகுத்து வகைப்படுத்தி விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் செ. இராசு, தமிழ்ப் பல்கலைகக்ழகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஓயாது கள ஆய்வு செய்து மிகுந்த ஈடுபாடு கொண்டு செய்துள்ள இந்த ஆவணத் தொகுப்பு பல அரிய செய்திகளைக் கொண்டுள்ளது. இத்தொகுப்பில் உள்ள […]

Read more

அரண்மனை

அரண்மனை, தமிழில் இறையடியான், சாகித்ய அகாடமி, விலை 455ரூ. கன்னட எழுத்தாளர் கும்.வீரபத்ரப்பா எழுதிய படைப்புகளில் மிகச் சிறந்த நாவல். இது கன்னட நாவல் உலகின் போக்கையே மாற்றி அமைத்தது என்றால் மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் காலனித்துவ காலகட்டத்தை வித்தியாசமான நோக்கில் படம் பிடித்துள்ள நாவல் இது. இதில் அரசு விசுவாசம், கும்பினி சர்க்காரின் ஆளுமை, மக்கள் நம்பிக்கையின் எதிரெதிர்ப் போக்குகள் ஆகியன மிக அழகிய முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. புதுமையான முறையில் மண்ணின் வாசனையை தன்னகத்தே கொண்டுள்ள இந்த நாவலை, இறையடியான் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். […]

Read more

சப்தமில்லாத சப்தம்

சப்தமில்லாத சப்தம், ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 200ரூ. இருபத்தோராம் வயதில் ஞானம் பெற்ற ஆன்மிக அறிஞர் ஓஷோ, சிறப்பு டைனமிக் தியான முறைகளை அறிமுகப்படுத்தியவர். அவர் சீடர்கள் மத்தியிலும், தம்மைச் சந்திக்க வந்தவர்கள் நடுவிலும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்புகள் 650 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உன்னதமான ஜந்து ஜென் கதைகள் மற்றும் சீடர்கள் கேட்ட கேள்விகளின் துணையுடன், தியானம் என்றால் என்ன என்பதற்கான தெளிவான விளக்கங்களை ஓஷோ இந்த நூலில் விளக்குகிறார். மனதின் செயல்பாடுகள் பற்றியும், அதை ஆராய்ந்து […]

Read more

ராமாயணம்

ராமாயணம், தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 275ரூ. சமஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்துக்கும், தமிழில் கம்பர் எழுதிய ராமாயணத்துக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. இதுபோல், மாறுபட்ட தகவல்களுடன் வேறு சில ராமாயணங்களும் இருக்கின்றன. பல்வேறு ராமாயணங்களையும் படித்து ஆராய்ந்த தேவி வனமாலி, கேரளாவை சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். கங்கை நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து, அங்கேயே வசித்து வருகிறார். அவர் ராமாயணத்தை ஆங்கிலத்தில் எழுதினார். பலராலும் பாராட்டப்பட்ட அந்த நூலை நாகலட்சுமி சண்முகம் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். […]

Read more

இயக்குனர் கே. சோமு : நாம் பெற்ற செல்வம்

இயக்குனர் கே. சோமு : நாம் பெற்ற செல்வம், விஸ்வபாரதி, காவ்யா, விலை 180ரூ. குறைந்த செலவில் சிறந்த படங்களை எடுத்தவர் டைரக்டர் கே. சோமு. சம்பூர் ராமாயணம், பாவை விளக்கு, மக்களைப் பெற்ற மகராசி, நான் பெற்ற செல்வம் ஆகியவை, சிவாஜிகணேசன் நடித்து சோமு இயக்கியவை. குறிப்பாக, “மக்களைப் பெற்ற மகராசி” திரைப்பட வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்ற படம். சிம்மக்குரலில் இயல்பாக பேசி நடித்து வந்த சிவாஜி கணேசன் இப்படத்தில் கொங்கு நாட்டு மக்கள் பேசுகிற பாணியில் பேசி நடித்தார். வட்டார […]

Read more

தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு, எம்.ஆர். இரகுநாதன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 150ரூ. தமிழ் நாட்டில் பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி பற்றிய விவரங்களை விவரிக்கும் நூல் இது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார், “கல்கி ராமகிருஷ்ண மூர்த்தி, எஸ்.எஸ். வாசன், எஸ்.ஏ.பி. அண்ணாமலை, “சாவி” முதலியோர் பத்திரிகைத்துறையில் எதிர்நீச்சல்போட்டு சாதனைகள் புரிந்ததை ஆசிரியர் நடுநிலையுடன் எழுதியுள்ளார். தமிழில் இதழியல் துறை பற்றி நூல்கள் அதிகம் இல்லை என்ற குறையை, இந்தப் புத்தகம் போக்கியுள்ளது. பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும், பத்திரிகைத் துறையில் ஈடுபட விரும்புகிறவர்களம் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் […]

Read more
1 2 3 4 5 6 8