மறக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள்
மறக்கப்பட்ட பெண் விஞ்ஞானிகள், பேரா.சோ.மோகனா, அறிவியல் வெளியீடு, விலை 40ரூ. பெண்களின் பங்களிப்பு வரலாற்றில் காலங்காலமாக இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது. ஆனால், இன்றைக்குப் பல துறைகளிலும் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில், புற்றுநோய் தாக்குதலிலிருந்து உத்வேகத்துடன் மீண்டெழுந்த பேராசிரியர் மோகனா, இதுவரை பரவலான கவனிப்பைப் பெறாமல் போன 10 பெண் விஞ்ஞானிகளைப் பற்றி இந்நூலின் வழியே அறியத்தருகிறார். பழங்காலப் பெண் கணிதவியலாளர்கள் தொடங்கி, மேரி ஆன்னிங், சாவித்திரிபாய் புலே, கமலா சோகோனி உள்ளிட்ட ஆளுமைகளின் செயலூக்கம், வாசிக்கையில் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. […]
Read more