பாம்பு இல்லாத பாம்பாட்டி

பாம்பு இல்லாத பாம்பாட்டி, ஸாய் விட்டேகர், அ.குமரேசன், புக்ஸ் பார் சில்ட்ரன், பக்.32, விலை 30ரூ. படிக்கத் தெரியாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு, கதை கேட்பது மிகவும் பிடித்தமானது. வாசிக்கத் தெரியும் போது, அவர்களை வசீகரிக்கக்கூடியது படக்கதைகள். அந்த வகையில், இந்த ஊர்வன பற்றிய காட்டின் கதை, அவர்களை கவரும். ஒற்றுமை உணர்வையும் வளர்க்கும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

செவக்காட்டு சொல் கதைகள்

செவக்காட்டு சொல் கதைகள், கழனியூரன், புக்ஸ் பார் சில்ட்ரன், சென்னை, விலை 140ரூ. செவக்காட்டு சொல்கதைகள் என்ற இந்த நாட்டுப்புற கதைக் களஞ்சியத்தை படைத்திருக்கிறார் எழுத்தாளர் கழனியூரன். கர்ணன் என்கிற மகாபாரதப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு நாட்டுப்புற மக்கள் உருவாக்கி இருக்கும் கதைகளை விவரிக்கும் அத்தியாயம் சுவாரசியம். அன்னதானம் மிக முக்கியமான மானுடப்பண்பாகப் பேணப்பட்டது என்பதைக் காண்பிக்கும் கதை இது. அத்துடன் கெட்டது செய்பவன் ஜெயிக்க முடியாது என்பதை தீர்மானமாக கிட்டத்தட்ட இதில் உள்ள எல்லா கதைகளும் சொல்கின்றன. நமது ஐதீகங்களில் புழுங்கும் ஐந்து […]

Read more

முதல்பெண்

முதல்பெண், பேரா. சோ. மோகனா, புக்ஸ் பார் சில்ட்ரன், சென்னை, விலை 50ரூ. முன்னோடிப் பெண்களின் வரலாறு பெண் இனத்தின் வரலாறு வெளிப்படும்போதுதான், பெண்மீதான இன்றைய மதிப்பீடு மாறும். இதன் ஒரு முயற்சியாகப் பேராசிரியை சோ. மோகனா எழுதிய முதல்பெண் என்ற நூல். முதல் பெண் அறிவியலாளர், கணிதவியலாளர், விண்வெளி விஞ்ஞானி, அறுவை சிகிச்சை மருத்துவர், இலக்கியவாதி, விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆகியோரை உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அகழ்வாய்வின் மூலமாகக் கிரேக்கத்திலும், எகிப்திலும், சைப்ரஸ் தீவிலும் கண்டறியப்பட்ட தொல்பொருட்களை ஆதாரமாகக் கொண்டு இந்த நூலை […]

Read more