செவக்காட்டு சொல் கதைகள்
செவக்காட்டு சொல் கதைகள், கழனியூரன், புக்ஸ் பார் சில்ட்ரன், சென்னை, விலை 140ரூ.
செவக்காட்டு சொல்கதைகள் என்ற இந்த நாட்டுப்புற கதைக் களஞ்சியத்தை படைத்திருக்கிறார் எழுத்தாளர் கழனியூரன். கர்ணன் என்கிற மகாபாரதப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு நாட்டுப்புற மக்கள் உருவாக்கி இருக்கும் கதைகளை விவரிக்கும் அத்தியாயம் சுவாரசியம். அன்னதானம் மிக முக்கியமான மானுடப்பண்பாகப் பேணப்பட்டது என்பதைக் காண்பிக்கும் கதை இது. அத்துடன் கெட்டது செய்பவன் ஜெயிக்க முடியாது என்பதை தீர்மானமாக கிட்டத்தட்ட இதில் உள்ள எல்லா கதைகளும் சொல்கின்றன. நமது ஐதீகங்களில் புழுங்கும் ஐந்து தலை நாகங்கள், அண்ட ரண்டப் பட்சிகள், ராஜா ராணிகள் புழங்கும் கதைகளாக இவை உருவாகி உள்ளன. தாத்தாவின் மடியில் பாட்டியின் மடியில் அமர்ந்து கதை கேட்க வாய்க்காத இந்த தலைமுறை சிறுவர் சிறுமியர்க்கு இக்கதைகள் போய்ச் சேரவேண்டும் என்பது கழனியூரனின் எதிர்பார்ப்பு. அந்திமழை மின்னிதழில் தொடராக வந்த கதைகள் இவை. – செப்டம்பர், 2015. நன்றி: அந்திமழை.
—-
என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள், சுமதிஸ்ரீ, விகடன் பிரசுரம், விலை 80ரூ.
கடந்து வந்த பாதை! To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-7.html இன்று பிரபலமான மேடைப்பேச்சாளராக அறியப்பட்டிருக்கும் சுமதிஸ்ரீயின் போராட்டம் நிறைந்த வாழ்க்கையின் கட்டத்தில் அவர் எதிர்கொண்ட அனுபவங்களை விவரிக்கிறது இந்நூல். கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியபோது இருமுகிறதே என்பதற்காக வீட்டிலிருந்து மிளகு ரசம் கொண்டுத்த மாணவி, சின்னவயதில் தன் பட்டுப்பாவாடையை வலுக்கட்டாயமாக வாங்கு கூடப்படித்த மாணவிக்கு கட்டிவிட்டு மேடை ஏற்றிய ஆசிரியை என்று பெண்களின் பார்வையிலிர்ந்து விரிந்து செல்லும் சம்பவங்கள். மேடைதோறும் தமிழில் முழங்கி பரிசுகளை வென்று கொண்டிருந்த மாணவியான சுமஸ்ரீயின் மனதில் இருந்த ரணங்கள், வீட்டை விட்டு வெளியேறி வைராக்கியத்துடன் படித்தபோது எதிர்கொண்ட, பசி, பணம் கட்டமுடியாமல் விடுதியை விட்டு வெளியேற்றப்பட்ட போது வடித்த கண்ணீர் என்று நூலாசிரியரின் தனிப்பட்ட அனுபவங்கள் உணர்ச்சிபூர்வமான மொழியில் பதிவாகி உள்ளன. ஒரு சில அத்தியாயங்களில் கண்கள் குளமாக வழிவதை தவிர்க்க இயலாது. – செப்டம்பர், 2015. நன்றி: அந்திமழை.