சரோஜாதேவி
சரோஜாதேவி, யுவகிருஷ்ணா, உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
கத்திமேல் குத்தாட்டம் To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024036.html பத்திரிகையாளரான யுவகிருஷ்ணாவின் சரோஜாதேவி புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் ஏற்கெனவே அவருடைய வரைப் பக்கத்தில் வெளியானவை. ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து, புன்னகைத்து கடந்து போன பதிவுகளை புத்தகமாக படிக்கும்போது சுவாரசியமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாமல் வரலாற்றில் இந்த தகவல்கள் இடம் பெறாமல் போனால் தமிழன் ரத்தம் கக்கியே சாவான் என்று தொகுத்ததோடு அல்லாமல் சாருநிவேதிதாவுக்கு சமர்ப்பணம் வேறு செய்துள்ளார் இந்த குறும்புக்காரர். சரோஜாதேவி தலைப்பு மட்டுமல்ல உள்ளே உள்ள கட்டுரைகளும் அஜால் குஜால் வகைதான். சமூகத்தில் அனைவரும் பேசவே தயங்குகிற விஷத்தை தைரியமாக பத்திரிகையாளனின் பார்வையில் தனக்கே உரிய ஜிலு ஜிலு நடையில் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் பெரும்பாலானவர்கள் அறிந்ததே. ஆனால் இப்படி ஒன்று நடந்தது என்ற பதிவே எங்கும் இருக்காது. சாந்தி தியேட்டர் வாசல் பிளாட்பாரக்கடை, சன்னி லியோனின் இந்திய பிரவேசம், அந்தகால ஜோதி, ஜெயலட்சுமி தியேட்டர்களின் கலைச்சேவை, இணைய உலகத்தின் கட்டற்ற சுதந்திரத்தில் நடக்கும் பாலியல் வழிப்பறிகள் என்று எதையும் மிச்சம் வைக்காமல் எழுதியுள்ளார். சிலவற்றில் நேரடியாக களமிறங்கி அனுபவங்களைப் பெற்றும் எழுதி உள்ளார். பாலியல் சார்ந்த எழுத்து என்பது கத்தி மேல் நடனமாடுவதுபோல. கொஞ்சம் பிசகினாலும் பட்டப்பெயரை கொடுத்து ஒதுக்கி வைத்துவிடும் ஆபத்திருக்கிறது. அதை தெரிந்தே கத்தி மேல் குத்தாட்டம் போட்டிருக்கிறார் யுவகிருஷ்ணா. – செப்டம்பர், 2015. நன்றி: அந்திமழை.