மகரந்த சுவடுகள்

மகரந்த சுவடுகள், சுமதிஸ்ரீ, விஜயா பதிப்பகம், பக்.112, விலைரூ.70. தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை மகரந்த சுவடுகளாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கல்லூரிக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் என எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர் வாங்கிப் படிக்கும் ஒரு மாணவியின் கஷ்டங்களை முதல் கட்டுரையில் அறிய முடிகிறது. ‘விடுதிக்குப் பணம் கட்ட முடியாததால் மதிய உணவு நேரத்தில் பட்டினியாக நூலகத்தில் நேரத்தைக் கழிக்கும் சுமதிக்கும் சேர்த்து, இரண்டு டிபன் பாக்ஸ்களில் சாப்பாடு கொண்டு வரும் கிறிஸ்டி என்னும் தோழியை 39’. ‘கடந்த […]

Read more

செவக்காட்டு சொல் கதைகள்

செவக்காட்டு சொல் கதைகள், கழனியூரன், புக்ஸ் பார் சில்ட்ரன், சென்னை, விலை 140ரூ. செவக்காட்டு சொல்கதைகள் என்ற இந்த நாட்டுப்புற கதைக் களஞ்சியத்தை படைத்திருக்கிறார் எழுத்தாளர் கழனியூரன். கர்ணன் என்கிற மகாபாரதப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு நாட்டுப்புற மக்கள் உருவாக்கி இருக்கும் கதைகளை விவரிக்கும் அத்தியாயம் சுவாரசியம். அன்னதானம் மிக முக்கியமான மானுடப்பண்பாகப் பேணப்பட்டது என்பதைக் காண்பிக்கும் கதை இது. அத்துடன் கெட்டது செய்பவன் ஜெயிக்க முடியாது என்பதை தீர்மானமாக கிட்டத்தட்ட இதில் உள்ள எல்லா கதைகளும் சொல்கின்றன. நமது ஐதீகங்களில் புழுங்கும் ஐந்து […]

Read more

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள், சுமதிஸ்ரீ, விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 96, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-196-7.html மதிஸ்ரீ, சிறந்த பேச்சாளர், சிறுவயது முதல் தான் அனுபவித்த கேட்ட, ரசித்த பல்வேறு விஷயங்களைத் தொகுத்து நூலாக்கியுள்ளார். வாழ்வின் உயர்வுக்கு எவை வேண்டும் என்பதை தனது அனுபவத்தின் வாயிலாக அழகிய நடையில் வாரி வழங்கியுள்ளார். பட்டுக்குட்டியின் பட்டுப் பாவாடை தொடங்கி அறுந்த செருப்பும், இறந்த மனிதனும் என்னும் 13 தலைப்பில் அவரது அனுபவப் பாடங்கள் விரிகின்றன. […]

Read more

தகப்பன் சாமி

தகப்பன் சாமி, சுமதிஸ்ரீ, கற்பகம் புத்தகாலயம், (நடேசன் பூங்கா அருகில்), தி.நகர், சென்னை 17, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-885-5.html பெண் மனசு பட்டிமன்றங்களிலும் வழக்காடு மன்றங்களிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் சுமதிஸ்ரீயின் கவிதைத் தொகுப்பு இது. பாசமுள்ள தந்தையை விட்டுவிட்டு ஒற்றை ரோஜாவுக்காகவும் ஒரே ஒரு வாழ்த்து அட்டைக்காகவும் ஓடிவந்துவிட்ட மகளின் பாச உணர்வுகளைப் பேசுகிறது முதல் கவிதையான தகப்பன் சாமி. அலர், மஞ்சள், நிகழ்ச்சித் தொகுப்பாளினியின் ஒருமணி நேரம், மருதாணி போன்ற […]

Read more