மகரந்த சுவடுகள்
மகரந்த சுவடுகள், சுமதிஸ்ரீ, விஜயா பதிப்பகம், பக்.112, விலைரூ.70.
தன் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களை மகரந்த சுவடுகளாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
கல்லூரிக் கட்டணம், தேர்வுக் கட்டணம், விடுதிக் கட்டணம் என எல்லாவற்றுக்கும் ஸ்பான்சர் வாங்கிப் படிக்கும் ஒரு மாணவியின் கஷ்டங்களை முதல் கட்டுரையில் அறிய முடிகிறது. ‘விடுதிக்குப் பணம் கட்ட முடியாததால் மதிய உணவு நேரத்தில் பட்டினியாக நூலகத்தில் நேரத்தைக் கழிக்கும் சுமதிக்கும் சேர்த்து, இரண்டு டிபன் பாக்ஸ்களில் சாப்பாடு கொண்டு வரும் கிறிஸ்டி என்னும் தோழியை 39’. ‘கடந்த மாதத்தில் ஒருநாள்39’ கட்டுரையில் தெரிந்து கொள்கிறோம்.
‘காதல் காதல் காதல்39’ கட்டுரையில் வரும் ராசுவின் காதல் முறிவும், அண்ணன் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய நேர்ந்த தம்பி, குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும் மனதை உலுக்குகின்றன 39‘. மீனாட்சியின் நட்சத்திரம் 39’.
‘கட்டுரையில் வரும் மாணவி முத்துலட்சுமி மறைந்து விட்டார் என்பதை அறியும்போது கண்கள் குளமாகின்றன. 39. ‘அயல் நாட்டு அகதிகள் 39‘, ‘காவியக்கவிஞர் வாலி 39’, ‘ தகப்பன் சாமிகள் 39’. ‘பிள்ளை நிலா 39’ என மொத்தம் பதினைந்து கட்டுரைகள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனதை நெகிழச் செய்கின்றன. வேறு ஒரு சிறந்த நூலைப் படிக்கும்வரை இந்த நூலின் பாதிப்பு மனதை விட்டு அகலாது.
நன்றி:தினமணி, 8/5/2017.