உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே

உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே, மலர்ச்சி பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ.

“உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேன்” என்பது திருமூலர் வாக்கு. இந்தப் புத்தகத்தில், நோய்கள் வராமல் தடுக்கவும், அப்படி நோய் வந்தால் என்ன சிகிச்சை பெறலாம் என்ற ஆலோசனைகளும் உள்ளன.

குறிப்பாக சர்க்கரை நோய் பற்றிய முக்கியமான தகவல்களும், சர்க்கரை நோய் வந்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் விரிவாக இடம் பெற்றுள்ளன. மற்றும் சிறுநீரகக் கல் வராமல் எப்படி தடுக்கலாம், பித்த வெடிப்புக்கான சிகிச்சை முறைகள் எவை, சளித்தொல்லைக்குத் தீர்வு என்ன, அழகிய முகம் பெற என்ன செய்ய வேண்டும், மலச்சிக்கலுக்குத் தீர்வு என்ன… என்பது பற்றி எல்லாம் நூலாசிரியர் பரமன் பச்சைமுத்துவும், சித்த மருத்துவர் நாகராஜனும் விரிவாக விடையளிக்கிறார்கள்.

சிறந்த சித்த மருத்துவ நூல்.

நன்றி: தினத்தந்தி, 3/5/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *