தகப்பன் சாமி

தகப்பன் சாமி, சுமதிஸ்ரீ, கற்பகம் புத்தகாலயம், (நடேசன் பூங்கா அருகில்), தி.நகர், சென்னை 17, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-885-5.html

பெண் மனசு பட்டிமன்றங்களிலும் வழக்காடு மன்றங்களிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் சுமதிஸ்ரீயின் கவிதைத் தொகுப்பு இது. பாசமுள்ள தந்தையை விட்டுவிட்டு ஒற்றை ரோஜாவுக்காகவும் ஒரே ஒரு வாழ்த்து அட்டைக்காகவும் ஓடிவந்துவிட்ட மகளின் பாச உணர்வுகளைப் பேசுகிறது முதல் கவிதையான தகப்பன் சாமி. அலர், மஞ்சள், நிகழ்ச்சித் தொகுப்பாளினியின் ஒருமணி நேரம், மருதாணி போன்ற கவிதைகளில் பெண் மனதின் உணர்வுகளை வடித்துள்ளார். எப்போது பேனா/எடுத்தாலும்ஸ்/எழுதிப் பார்க்கிறேன். உன் நான்கெழுத்துப் பெயரை – என்பது போன்று காதலையும் நேசத்தையும் பதிவு செய்யும் வரிகள் பல கவிதைகளில் நிரம்பி உள்ளன. தாத்தா/சாராயம் அதிகம்/குடித்துசெத்துப்போனார்/பேரன் அதிகமாய்/சாராயம் குடித்து செத்துப்போனான்-என்பது போன்ற வார்த்தை விளையாட்டுகளும் உண்டு. நன்றி: அந்திமழை, 1/12/13.  

—-

 

ஜகத்குரு, ப்ரியா கல்யாணராமன், குமுதம் புதுத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 624, விலை 280ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-167-7.html

ஆதிசங்கரரின் வரலாற்றை மிக விரிவாகப் பேசும் நூல். அவர் அவதரித்த காலடியில் தொடங்கி, அவர் பாதம்பட்ட பாரததேசம், நேபாளம், கைலாயம் முழுமைக்கும் இந்நூலாசிரியர் நேரில் சென்று தரிசித்து எழுதியிருப்பது புதிய முயற்சி. ஒரு புனிதமான காரியமும்கூட. மேலும் சங்கரரால் புனிதப்படுத்தப்பட்ட ஆலயங்களின் அற்புத வரலாற்றையும் தந்திருப்பது வரலாற்று ஆய்வுக்கான ஒரு களமாக இந்நூல் விளக்குகிறது. ஆதிசங்கரர் மட்டுமல்ல அவருக்குப் பின் வாழையடி வாழையாக காஞ்சிமடத்தை அலங்கரித்து அருள்புரிந்த எல்லா ஆச்சாரியர்களின் வரலாற்றைப் பற்றியும் ஒரே நூலில் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் உதவியிருக்கிறார். ஆதிசங்கரரின் கருத்துக்களின் தமிழ் அர்த்தங்கள், பாமரர்களுக்கும் புரியும் விதத்தில் அவர் அருளிய கேள்வி பதில்கள். ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆன்மிக ஞானம், இன்றைய ஆச்சாரியாரான ஸ்ரீஜெயந்திரரின் ஆன்மிகத் தொண்டும் ஆன்மிக விளக்கங்களும் சின்ன பெரியவர் ஸ்ரீவிஜயேந்திரரின் ஆன்மிகப்பணி என்று ஆதிசங்கரரின் வழித்தோன்றல்கள் பற்றிய தொகுப்புகள் இந்து மதத்தின் வளர்ச்சிக்கான பேருதவியாக பதிவாக்கியிருப்பது ப்ரியா கல்யாணராமனின் தனித்திறன். ஆதிசங்கரரின் கால்பட்ட இடங்களில் நின்று அவரைப் பற்றிய தரவுகளைத் திரட்டி எழுதியது நூலாசிரியருக்கு கிடைத்த பாக்கியம். வாசகர்களுக்கு கிடைத்த ஆன்மிக பொக்கிஷம். நன்றி: குமுதம், 18/12/13.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *