தகப்பன் சாமி

தகப்பன் சாமி, ராமசுப்பு, வித்யுத் பப்ளிகேஷன்ஸ், பக். 114, விலை 100ரூ. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியது விசாக நட்சத்திரத்தில். எனவே முருகனை, விசாகன் என்றும் அழைக்கின்றனர். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், கார்த்திகேயன் எனப்படுகிறான். சூரனை வெல்வதற்காகப் படைக்கப்பட்ட முருகன், வீரபாகு உட்பட, ஒன்பது வீரர்களின் துணையுடன், சக்தி கொடுத்த வேல் கொண்டு தாரகாசுரனையும், சிங்கமுகனையும் மற்றும் சூரனையும் அழிக்கிறான். தீபாவளியும், திருக்கார்த்திகையும் ஒரே விழாக்கள் என்றும், பங்குனி உத்திரத்தில் வள்ளியை, முருகன் மணம் புரிந்தான் முதலான தகவல்களை, இந்த நூல் எடுத்துரைக்கிறது. […]

Read more

தகப்பன் சாமி

தகப்பன் சாமி, சுமதிஸ்ரீ, கற்பகம் புத்தகாலயம், (நடேசன் பூங்கா அருகில்), தி.நகர், சென்னை 17, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-885-5.html பெண் மனசு பட்டிமன்றங்களிலும் வழக்காடு மன்றங்களிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் சுமதிஸ்ரீயின் கவிதைத் தொகுப்பு இது. பாசமுள்ள தந்தையை விட்டுவிட்டு ஒற்றை ரோஜாவுக்காகவும் ஒரே ஒரு வாழ்த்து அட்டைக்காகவும் ஓடிவந்துவிட்ட மகளின் பாச உணர்வுகளைப் பேசுகிறது முதல் கவிதையான தகப்பன் சாமி. அலர், மஞ்சள், நிகழ்ச்சித் தொகுப்பாளினியின் ஒருமணி நேரம், மருதாணி போன்ற […]

Read more