தகப்பன் சாமி
தகப்பன் சாமி, ராமசுப்பு, வித்யுத் பப்ளிகேஷன்ஸ், பக். 114, விலை 100ரூ. சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து முருகன் தோன்றியது விசாக நட்சத்திரத்தில். எனவே முருகனை, விசாகன் என்றும் அழைக்கின்றனர். கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், கார்த்திகேயன் எனப்படுகிறான். சூரனை வெல்வதற்காகப் படைக்கப்பட்ட முருகன், வீரபாகு உட்பட, ஒன்பது வீரர்களின் துணையுடன், சக்தி கொடுத்த வேல் கொண்டு தாரகாசுரனையும், சிங்கமுகனையும் மற்றும் சூரனையும் அழிக்கிறான். தீபாவளியும், திருக்கார்த்திகையும் ஒரே விழாக்கள் என்றும், பங்குனி உத்திரத்தில் வள்ளியை, முருகன் மணம் புரிந்தான் முதலான தகவல்களை, இந்த நூல் எடுத்துரைக்கிறது. […]
Read more