தமிழாய்வு: தடங்களும் தளங்களும்
தமிழாய்வு: தடங்களும் தளங்களும், முனைவர் சு. தமிழ்வேலு, விலை 250ரூ.
தமிழ்நாட்டில் நடைபெற்ற கருத்தரங்குகளில், 65 தலைப்புகளில் சமர்ப்பிக்கப்பட்ட 1402 கட்டுரைகள் பற்றிய பட்டியல் (கட்டுரை ஆசிரியர், கட்டுரையின் தலைப்பு, ஆண்டு முதலிய விவரங்கள்), இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஆய்வாளர்களுக்கு பயன்படும்.
நன்றி: தினத்தந்தி, 23/3/2016.
—-
வில்லங்கம் இல்லாமல் வீட்டு மனை வாங்கி வீடு கட்டுவது எப்படி, ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 170ரூ.
மனை வாங்குதல், அதன் பிறகு பத்திரம் பதிவு செய்தல், பட்டா பெறுதல் போன்ற அனைத்து ஆலோசனைகளையும் இந்த நூலில் வடகரை செல்வராஜ் விளக்கமாக எழுதியுள்ளார். வீட்டுக் கடன் பெறுவது எப்படி? உள்ளாட்சி நிறுவனங்களிடம் அனுமதி பெறும் வழிமுறைகள் போன்ற ஏராளமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. வீடு மற்றும் வீட்டு மனை வாங்குவோருக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டி.
நன்றி: தினத்தந்தி, 23/3/2016.