சப்தமில்லாத சப்தம்
சப்தமில்லாத சப்தம், ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 200ரூ.
இருபத்தோராம் வயதில் ஞானம் பெற்ற ஆன்மிக அறிஞர் ஓஷோ, சிறப்பு டைனமிக் தியான முறைகளை அறிமுகப்படுத்தியவர்.
அவர் சீடர்கள் மத்தியிலும், தம்மைச் சந்திக்க வந்தவர்கள் நடுவிலும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்புகள் 650 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. நாற்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
உன்னதமான ஜந்து ஜென் கதைகள் மற்றும் சீடர்கள் கேட்ட கேள்விகளின் துணையுடன், தியானம் என்றால் என்ன என்பதற்கான தெளிவான விளக்கங்களை ஓஷோ இந்த நூலில் விளக்குகிறார். மனதின் செயல்பாடுகள் பற்றியும், அதை ஆராய்ந்து அறியவும் அவருக்கே உரிய பாணியில் சொல்லித் தருகிறார்.
நன்றி: தினத்தந்தி, 23/3/2016.