குறுந்தொகை மலர்கள்

குறுந்தொகை மலர்கள், ப. அநுராதா, ரமணி பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. புலி புலி என்று கூவினால் பூக்கள் உதிரும்! சங்க இலக்கியங்களில் ‘நல்ல குறுந்தொகை’ எனும் சிறப்பான அடைமொழியைப் பெற்ற குறுந்தொகையில் காணப்படும் மலர்கள் குறித்து விவரிப்பதுதான் இந்த நூல். குறுந்தொகையில், அடும்பு துவங்கி வேம்பு வரை, 46 மலர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அந்த மலர்களது அகர வரிசைப்படி ஒவ்வொரு மலரையும், மலர் குறித்த தாவரவியல் கருத்து, தாவரவியல் பெயர், மலர் இடம் பெறும் பாடல் எண்வரி, புலவரின் பெயர், பாடல் […]

Read more

ப்ளிங்க்

ப்ளிங்க், சித்தார்த்தன் சுந்தரம், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 350ரூ. நமக்குள் இருக்கக்கூடிய உலகத்தை நாம் புரிந்து கொள்ளும் உத்திகளையும், வேக உணர்திறன் சாமானிய மனிதருக்கும் சாத்தியமாகக்கூடியதுதான் என்பதையும் உளவியல் ரீதியாக கற்றத் தருகிறார் நூலாசிரியர் மால்கம் கிளாட்வெல். ஆங்கிலத்திலிருந்து எளிய தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சித்தார்த்தன் சுந்தரம். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.   —- குறுந்தொகை மலர்கள், ரமணி பதிப்பகம், விலை 150ரூ. சங்க இலக்கியங்களில் தனிச்சிறப்பு பெற்ற குறுந்தொகையைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூல். பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவரான பேராசிரியை ப. அனுராதா, […]

Read more

வாழ்வியல் பூக்கள்

வாழ்வியல் பூக்கள்(குறுநாவல்கள், சிறுகதைகள்), திருமதி சங்கரி அப்பன், ரமணி பதிப்பகம், 69, மேலப் பொன்னகரம் 5வது தெரு, (ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில்), மதுரை 625016, பக். 236, விலை 75ரூ. அமரர் தீபம் நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு நாவலைப் படித்து தமிழ் எழுத்து உலகில் நுழைந்த இந்த எழுத்தாளரின் இந்த முதல் படைப்புத் தொகுப்பு வாசகர்களை வசீகரிக்கும் என்று சொல்லலாம். மூன்று குறுநாவல்களும், 33 சிறுகதைகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பிற்கு, அறிஞர் பெருமக்களின் மதிப்புரையும், வாசித்து மகிழ்ந்த வாசகர்கள் கடிதங்களும் சிறப்பு சேர்க்கின்றன. […]

Read more