வாழ்வியல் பூக்கள்

வாழ்வியல் பூக்கள்(குறுநாவல்கள், சிறுகதைகள்), திருமதி சங்கரி அப்பன், ரமணி பதிப்பகம், 69, மேலப் பொன்னகரம் 5வது தெரு, (ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகில்), மதுரை 625016, பக். 236, விலை 75ரூ. அமரர் தீபம் நா. பார்த்தசாரதியின் பொன்விலங்கு நாவலைப் படித்து தமிழ் எழுத்து உலகில் நுழைந்த இந்த எழுத்தாளரின் இந்த முதல் படைப்புத் தொகுப்பு வாசகர்களை வசீகரிக்கும் என்று சொல்லலாம். மூன்று குறுநாவல்களும், 33 சிறுகதைகளையும் உள்ளடக்கிய இந்தத் தொகுப்பிற்கு, அறிஞர் பெருமக்களின் மதிப்புரையும், வாசித்து மகிழ்ந்த வாசகர்கள் கடிதங்களும் சிறப்பு சேர்க்கின்றன. […]

Read more

வண்ண நிலவன் சிறுகதைகள் – தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை

தாசன் கடைவழியாக அவர் செல்வதில்லை (வண்ண நிலவன் சிறுகதைகள்), நற்றிணை பதிப்பகம், 243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-471-0.html நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் நிறைய எழுதி, இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தேடிக்கொண்டிருப்பவர் வண்ண நிலவன். சில இலக்கியப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். ருத்ரையாவின் அவள் அப்படித்தான் திரைப்படத்தில் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். பல துறைகளில் பணிபுரிந்தாலும், சிறுகதை ஆசிரியராக உச்சத்தைத் தொட்டவர். இப்போது, […]

Read more

கூடுகள் சிதைந்தபோது

கூடுகள் சிதைந்தபோது ஆசிரியர் – அகில் பதிப்பு – வம்சி புக்ஸ் சாரோன் திருவண்ணாமலை மு. ப. டிச. 2011 பக்கங்கள் 184 விலை 120ரூ போரும் புனைவும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அகிலின் கூடுகள் சிதைந்த போது என்ற சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 14 சிறுகதைகள் உள்ளன. ஈழத்தைச் சார்ந்த ஓர் எழுத்தாளர் யுத்தத்தைத் தாண்டி சிந்திப்பபெதன்பது இனி முடியாது என்றே தோன்றுகிறது. அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தொகுப்பிலுள்ள பெரும்பாலான கதைகள் போர் நெறியைக் கொஞ்சமும் பின்பற்றாத ஈழத்தில் […]

Read more

நீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களா?

நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா?, இரா. நடராசன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை 18, விலை 65ரூ. விஞ்ஞானி ஆக வேண்டும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழிகாட்டத்தான் ஆளிருக்காது. அப்படியாப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கதை வடிவில் பல நாட்டு விஞ்ஞானிகளின் வாழ்க்கையை சுவைபட விளக்குகிறது இந்நூல். — மங்காவு, சொ. அருணன், கபிலன் பதிப்பகம், 321, மூன்றாம் முதன்மைச்சாலை, புதுச்சேரி -8, விலை 60ரூ. மொத்தம் 11 சிறுகதைகள் […]

Read more

இனி நான் டைகர் இல்லை

இனி நான் டைகர் இல்லை, உயிரெழுத்து பதிப்பகம், திருச்சி. பக்கங்கள்: 80, விலை: 60 ரூ சாளரங்களை திறக்கும் கதையாளி வெவ்வேறு வடிவங்களில் குறுகிய பக்கங்களில் நகர்கின்றன சமயவேலின் கதைகள். — சா. தேவதாஸ் காற்றின் பாடல் என்னும் கவிதைத் தொகுதியின் மூலம் பரவலாக அறியப்பட்டுள்ள கவிஞர் சமயவேலின் சிறுகதைத் தொகுதி, இனி நான் டைகர் இல்லை. 16 சிறுகதைகளைக் கொண்டுள்ள இந்த நூல், சிறுகதைகளின் பல்வேறு வடிவங்களை வாசகர்களுக்கு பரிச்சயமாக்குகிறது. கட்டுரை வடிவில் ஒரு கதை என்றால் அறிவியல் புனைவாக இன்னொரு கதை. […]

Read more

இந்தியச் சிறுகதைகள் (1900-2000)

இந்தியச் சிறுகதைகள் (1900-2000), தொகுப்பாசிரியர்-இ.வி.ராமகிருஷ்ணன், தமிழில்-பிரேம், பக்.549, சாகித்ய அகாதெமி, தேனாம்பேட்டை, சென்னை-18. இருபத்து ஏழு இந்திய மொழிகளில் இருந்து மிகச்சிறந்த கதைகளை தேர்வு செய்து வாசகர்களுக்கு புதிய வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது இந்நூல். ஒவ்வொரு மாநிலங்களிலும் வாழும் மக்களின் வேறுபட்ட தன்மைகள், சிக்கல்களை பிரதிபலிக்கும் கதைகள். புனிதங்கள், புனிதமற்றவை, மேல்தட்டு சிந்தனைகள், ஒடுக்கப்பட்டவர்களின் சிந்தனைகள் எனப் பல நிலைகளைத் தெளிவாகப் படம் பிடித்து காட்டுகின்றன இந்தக் கதைகள். இந்திய மொழிகளில் இந்நூற்றாண்டின் சில பத்தாண்டுகளில் எழுதப்பட்ட இச் சிறுகதைகள் கொந்தளிப்பில் இருந்த ஒரு தேசத்தின் […]

Read more