வண்ண நிலவன் சிறுகதைகள் – தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை

தாசன் கடைவழியாக அவர் செல்வதில்லை (வண்ண நிலவன் சிறுகதைகள்), நற்றிணை பதிப்பகம், 243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 200ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-471-0.html நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் நிறைய எழுதி, இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தேடிக்கொண்டிருப்பவர் வண்ண நிலவன். சில இலக்கியப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். ருத்ரையாவின் அவள் அப்படித்தான் திரைப்படத்தில் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். பல துறைகளில் பணிபுரிந்தாலும், சிறுகதை ஆசிரியராக உச்சத்தைத் தொட்டவர். இப்போது, தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை என்ற நீண்ட தலைப்புடன் வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுதியில், பல அருமையான கதைகள் உள்ளன. உதாரணமாக தலைப்புக்குரிய கதை, நெல்லை வட்டாரத் தமிழில் எழுதப்பட்டது. எதிர்பாராத திருப்பத்தை, கடைசி பாராவில் நறுக் என்று சொல்கிறார். மனைவியின் நண்பர் கதையில் சம்பவங்கள் அதிகம் இல்லை என்று பலர் நினைக்கலாம். ஆனால் நல்ல சிறுகதைக்கான இலக்கணப்படி அக்கதை அமைந்துள்ளது. நன்றி – தினத்தந்தி, 31 அக்டோபர் 2012.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *