நீங்களும் விஞ்ஞானி ஆகவேண்டும் என்று விரும்புகிறீர்களா?
நீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா?, இரா. நடராசன், பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை 18, விலை 65ரூ. விஞ்ஞானி ஆக வேண்டும் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அதற்கு வழிகாட்டத்தான் ஆளிருக்காது. அப்படியாப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் கதை வடிவில் பல நாட்டு விஞ்ஞானிகளின் வாழ்க்கையை சுவைபட விளக்குகிறது இந்நூல். — மங்காவு, சொ. அருணன், கபிலன் பதிப்பகம், 321, மூன்றாம் முதன்மைச்சாலை, புதுச்சேரி -8, விலை 60ரூ. மொத்தம் 11 சிறுகதைகள் இடம் பெற்றுள்ள தொகுப்பு இது. எழுத்து நடை சுருக்கமாகவும் ‘சுருக்’ என்றும் இருக்கிறது. கதைகளுக்கு வழக்கமான ஓவியங்களைப் பயன்படுத்தாமல் நவீன ஓவியங்கள் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அருணனின் கதைகளைக் காட்டிலும் அவரது முன்னுரை எல்லோரையும் கவரும். — சாந்தனைச் சுற்றி ஏன் வண்டுகளாய் மொய்க்கின்றனர்?, கு. குழந்தைசாமி, காந்தி அமைதி நிறுவனம், ஆழ்வார்பேட்டை, சென்னை 18, விலை 25ரூ. குழந்தைகளுக்கான 51 சிறுகதைகள் நிறைந்த நூல் இது. ஆனால் குழந்தைகள் படித்து புரிந்துகொள்ள முடியாத நடையில் இருக்கிறது. கதாபாத்திரங்களின் பெயர்களும் கடினம். சிறுகதைகளுக்கான படங்களை குழந்தைகளே வரைந்திருப்பது வெகுசிறப்பு. தொகுப்பு- கா. சு. துரையரசு நன்றி: இந்தியாடுடே, செப்டம்பர், 05/12