சோழர் காலத் தமிழ் மக்கள் வரலாறு

சோழர் காலத் தமிழ் மக்கள் வரலாறு, டாக்டர் க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, பக்கங்கள் 288, விலை 250 ரூ. ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்று புகழப்படும் சோழ நாட்டின் தமிழ் மக்கள் வாழ்ந்த முறை பற்றிய வரலாற்று நூலாக இந்நூல் வெளிவந்ததுள்ளது. துலோக்கோல் போன்று சீர் துக்கிப் பார்த்துத் தம் கருத்துக்களை எழுதும் இந்நூலாசிரியர் இந்நூலில் தெள்ளத் தெளிவாக, சோழ நாட்டின் அன்றையச் சமுதாய மக்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். சோழ மன்னர்களை, அவர்களின் ஊராட்சி, சமயம், கோவில்கள், பிராமணர்கள், […]

Read more

சண்டே இண்டியன் செப்டம்பர் 2012 புத்தக அறிமுகங்கள்

சப்தரேகை, ராணி திலக், அனன்யா வெளியீடு, 8/37, பி.ஏ.ஓய் நகர், குழந்தை ஏசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-5, விலை 100ரூ தமிழில் கவிதைகளின் பெருக்கத்தை ஒப்பிடும்போது கவிதை விமர்சனங்கள் மிகவும் அரிதாகவே எழுதப்படும் சூழல் இது. இப்பின்னணியில் சமகால நவீன கவிஞர்களில் முக்கியமானவரான ராணி திலக், 26 கவிஞர்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளது முக்கியமானது. பிரம்மராஜன், நகுலன், ஸ்ரீநேசன் பற்றிய கட்டுரைகள் அவர்களது கவிதை உலகத்தை ஆழமாகப் பேசுபவை. அவசரகதியிலும் மேலோட்டமாகவும் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளும் இதில் உள்ளன. சமகாலத்தில் இயங்கும் […]

Read more

இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள்

இந்திய மக்கள் பழக்க வழக்கங்கள் – சடங்குகள் – நிறுவனங்கள், அபே.ஜெ.எ.துபுவா, தமிழில் – வி.என். ராகவன், அலைகள் வெளியீட்டகம், 4/9, 4-வது முதன்மைச்சாலை, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை – 24. விலை-260 ரூ 200 ஆண்டுகளுக்கு முன்னால் பிரெஞ்சு நாட்டில் இருந்து தென்இந்தியாவுக்கு வந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஜெ.எ. துபுவாவுக்கு இந்தியாவை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிற ஐரோப்பியர்களிடம், இந்தியர்களைப் பற்றிய முறையான தகவல்கள் எதுவுமே இல்லையே என்ற வருத்தம் இருந்தது. அந்த வருத்தத்தைப் போக்க துபுவா எழுதிய […]

Read more

இந்தியச் சிறுகதைகள் (1900-2000)

இந்தியச் சிறுகதைகள் (1900-2000), தொகுப்பாசிரியர்-இ.வி.ராமகிருஷ்ணன், தமிழில்-பிரேம், பக்.549, சாகித்ய அகாதெமி, தேனாம்பேட்டை, சென்னை-18. இருபத்து ஏழு இந்திய மொழிகளில் இருந்து மிகச்சிறந்த கதைகளை தேர்வு செய்து வாசகர்களுக்கு புதிய வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது இந்நூல். ஒவ்வொரு மாநிலங்களிலும் வாழும் மக்களின் வேறுபட்ட தன்மைகள், சிக்கல்களை பிரதிபலிக்கும் கதைகள். புனிதங்கள், புனிதமற்றவை, மேல்தட்டு சிந்தனைகள், ஒடுக்கப்பட்டவர்களின் சிந்தனைகள் எனப் பல நிலைகளைத் தெளிவாகப் படம் பிடித்து காட்டுகின்றன இந்தக் கதைகள். இந்திய மொழிகளில் இந்நூற்றாண்டின் சில பத்தாண்டுகளில் எழுதப்பட்ட இச் சிறுகதைகள் கொந்தளிப்பில் இருந்த ஒரு தேசத்தின் […]

Read more