சண்டே இண்டியன் செப்டம்பர் 2012 புத்தக அறிமுகங்கள்
சப்தரேகை, ராணி திலக், அனன்யா வெளியீடு, 8/37, பி.ஏ.ஓய் நகர், குழந்தை ஏசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-5, விலை 100ரூ தமிழில் கவிதைகளின் பெருக்கத்தை ஒப்பிடும்போது கவிதை விமர்சனங்கள் மிகவும் அரிதாகவே எழுதப்படும் சூழல் இது. இப்பின்னணியில் சமகால நவீன கவிஞர்களில் முக்கியமானவரான ராணி திலக், 26 கவிஞர்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளது முக்கியமானது. பிரம்மராஜன், நகுலன், ஸ்ரீநேசன் பற்றிய கட்டுரைகள் அவர்களது கவிதை உலகத்தை ஆழமாகப் பேசுபவை. அவசரகதியிலும் மேலோட்டமாகவும் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளும் இதில் உள்ளன. சமகாலத்தில் இயங்கும் கவிஞர்களின் கவிதை உலகம் குறித்த அறிமுகத்திற்கு சப்தரேகை கட்டுரைகள் நிச்சயம் உதவும். — எம்.எஸ்.ஆபீஸ், ஜெயவீரநாதன், பாலாஜி கணினி வரைகலை பயிலகம் வெளியீடு, கோயமுத்புத்தூர் 641 045, விலை 290ரூ எம்.எஸ்.ஆபீஸ் குறித்து தமிழில் வெளியாகியுள்ள எளிமையான நூல் இது. வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட், ஆக்ஸஸ், பப்ளிஷர் உள்ளிட்ட அனைத்து மென்பொருள்களையும் அடிப்படை நிலையில் பபழகுவதற்கான புத்தமாக இது உள்ளது. கணிப்பொறியின் அடிப்படைப் பயன்பாடுகளில் பரிச்சயம் கொள்வதற்கு ஏற்றத்தாகவும் உள்ளது. இந்நு¡ல் லேஅவுட் கற்க விரும்புபவர்களுக்கு மிகவும் வழிகாட்டியாக திகழும். — நட்சத்திரம் விழும் நேரத்தில் – கிரேஸி, தமிழில் – உதயசங்கர், வாசல் வெளியீடு, 45டி/3 முதல் தெரு வசந்த் நகர், மதுரை 3, விலை 60ரூ தகழி தொடங்கி கவிஞர் ஐயப்பன் வரை மொழிபெயர்ப்பாகி பரவலாக வாசிக்கப்படும் சூழல் இது. மலையாளத்தில் எழுதும் சமகால எழுத்தாளர்களில் ஒருவரான கிரேஸியினு சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார் எழுத்தாளர் உதயசங்கர். பெரும்பாலும் மூன்று நான்கு பக்கங்களே உள்ள இச்சிறுகதையில் பல்வேறு பெண்களின் சாயல்களும் குரல்களும் துல்லியமாக கேட்கின்றன. தோற்றத்தில் எளிமையாக இருக்கும் இக்கதைகள் அழுத்தமான அதிர்வுகளைத் தருபவை. நன்றி: சண்டே இண்டியன், செப்டெம்பர் 2012