சண்டே இண்டியன் செப்டம்பர் 2012 புத்தக அறிமுகங்கள்

சப்தரேகை, ராணி திலக், அனன்யா வெளியீடு, 8/37, பி.ஏ.ஓய் நகர், குழந்தை ஏசு கோவில் அருகில், புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-5, விலை 100ரூ தமிழில் கவிதைகளின் பெருக்கத்தை ஒப்பிடும்போது கவிதை விமர்சனங்கள் மிகவும் அரிதாகவே எழுதப்படும் சூழல் இது. இப்பின்னணியில் சமகால நவீன கவிஞர்களில் முக்கியமானவரான ராணி திலக், 26 கவிஞர்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளது முக்கியமானது. பிரம்மராஜன், நகுலன், ஸ்ரீநேசன் பற்றிய கட்டுரைகள் அவர்களது கவிதை உலகத்தை ஆழமாகப் பேசுபவை. அவசரகதியிலும் மேலோட்டமாகவும் எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளும் இதில் உள்ளன. சமகாலத்தில் இயங்கும் […]

Read more