சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாடு
சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாடு, சு.சசிகலா, காவ்யா, பக்.272, விலை ரூ.280
சித்தர்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளைச் செய்திருக்கும் நூலாசிரியர், சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாட்டை ஆய்வு செய்திருக்கிறார்.
அகத்தியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர் உள்ளிட்ட 18 சித்தர்களின் வரலாற்றையும், அவர்களுடைய படைப்புகளில் காணப்படும் இறைக்கோட்பாட்டையும் இந்நூல் ஆய்வு செய்திருக்கிறது. யோகம், மருத்துவம், ஞானம், இரசவாதம் ஆகியவற்றை சித்தர்கள் நுட்பமாக விளக்கியுள்ளதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
மனிதனுக்கு வெளியே உள்ள அண்டத்துள் உள்ளது மனிதனின் பிண்டத்துள் உள்ளது என்று சித்தர்கள் கூறியிருப்பதை, மனிதன் இயற்கையின் ஒரு பகுதி, அதிலிருந்து மனிதனைப் பிரிக்க முடியாது; இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் இயங்கியல்ரீதியான உறவு இருக்கிறது என நவீன சிந்தனை கூறுகிறது. நூலாசிரியர் அண்டத்தை இறைவனாக்கி, அதன் அடிப்படையில் சித்தர்களின் இறைக்கோட்பாட்டை இந்நூலில் ஆராய்ந்திருக்கிறார்.
சித்தர்களின் தோற்றம், நடை,உடை பாவனைகள், செயல்கள் எனப் பலவற்றையும் விரிவாக ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. எள்ளில் எண்ணெய் மறைந்து இருப்பதைப் போல அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டிருக்கும் ஆன்மாவைத் தாண்டி இறைவனை அறிய முற்படுவதற்கான செயல்களில் ஈடுபட்டு பெறுகின்ற ஞானமே வித்தை என்று சித்தர்கள் கூறுவதை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.
நன்றி: தினமணி, 26/8/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818