தாய்மை

தாய்மை, டாக்டர் ஜெயம் கண்ணன், கர்ப்ப ரக்ஷாம்பிகை மகப்பேறு மையம், யுனைடெட் இந்தியா காலனி, 4, ஆறாவது குறுக்குத்தெரு, கோடம்பாக்கம், சென்னை 24, விலை 300ரூ.

தாய்மை என்ற அற்புதமான அனுபவத்தை அடைந்த கணத்தில்தான் ஒரு பெண் முழுமை அடைகிறாள். அதனால்தான் தாய்மை அனுபவத்திற்கு நிகராகச் சொல்வதற்கு இந்த உலகின் வேறு எதுவுமே இல்லை என சொல்லப்படுகிறது. கருமுட்டை தயாராகும் முதல் வாரம் தொடங்கி 40 வாரங்களில் ஒரு சிசு படிப்படியாக அடையும் மாற்றங்களையும் நிகழ்வுகளையும் குழந்தைக்கு எப்போது இதயம் துடிக்கத் தொடங்குகிறது? எப்போது ஹார்மோன் சுரக்கிறது? கைரேகை உருவாக்குவது எப்போது என அத்தனை விவரங்களையும் படங்களோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எப்படிப்பட்ட அறிகுறிகளை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும். எதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தவிர்க்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கர்ப்பிணியின் அருகிலும் ஒரு டாக்டர் இருப்பது சாத்தியம் இல்லை என்றாலும், அப்படி ஒரு அனுபவத்தை கர்ப்பிணிப்பெண்களுக்குத் தரும் வண்ணம் அற்புதமான புத்தகத்தைப் படைத்திருக்கிறார் டாக்டர் ஜெயம் கண்ணன்.  

—-

 

மாலினி எங்கே நீ, லா.ச. ரங்கராஜன், சொர்ணவள்ளி பிரசுரம், 14, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 114ரூ.

பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்நூலில் 3 குறுநாவல்களும், 12 சிறுகதைகளும் அடங்கியுள்ளன. பெண்கள் வாழ்க்கையில்நடக்கும் நிகழ்ச்சிகளை சித்தரித்து சுவை நயத்தோடு எழுதப்பட்டுள்ளது.  

—-

 

ஏவுகணையும் கொசுக்கடியும், விஞ்ஞானி வி. டில்லிபாபு, மித்ர ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ், 20/2, ஜக்கரியா காலனி முதல் தெரு, சூளைமேடு, சென்னை 94, விலை 80ரூ-

போர் விமானங்கள் வடிவமைப்பு, அதனை சோதனை செய்யும் விதம், செயல்பாடு பற்றிய அறிவியல் சார்ந்த தகவல்களை எளிய தமிழில் விவரிக்கிறார். நூலின் ஆசிரியர் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருப்பதால் தொழில் நுட்ப தகவல்கள் நூலில் பரவலாக வீற்றிருக்கிறது. நன்றி: தினத்தந்தி,17/7/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *