கம்ப இராமாயணம்-ஓர் அறிமுகம்

கம்ப இராமாயணம்-ஓர் அறிமுகம், பேராசிரியர்-அ.ச. ஞானசம்பந்தன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 352, விலை 150ரூ.

கம்ப ராமாயணத்தை புதிய பார்வையில் ஆய்வு நோக்கில் அலசி ஆராய்ந்தவர் அ.ச. ஞானசம்பந்தன். கோவை கம்பன் அறநிலை வெளியிட்ட கம்பராமாயண நூல்களுக்கு ஆறு காண்டங்களுக்கும், அ.ச. ஞானசம்பந்தன் எழுதிய முன்னுரைகளை தனி நூலாக்கி, கம்பராமாயணத்தை முழுமையாக அறிந்து கொள்ள உதவியிருக்கிறார்கள். பாலகாண்டம் தொடங்கி யுத்த காண்டம் முடிய இன்னும் ஆராய வேண்டிய பகுதிகளைப் பற்றி ஆசிரியர் எடுத்துச் சொல்லி, ராமாயணக்கதையை சொல்லியிருப்பது புதுமையிலும் புதுமை. ராமன், இலக்குவன் என்ற பாத்திரப்படைப்பை தனியாக சிந்தித்தால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காப்பிய அளவு விரியும் என்கிறார் நூலாசிரியர். படிக்க படிக்க புதுப் புதுக்கோணம் நம்முள் விரிகிறது. நன்றி: குமுதம், 24/7/13.  

—-

 

பிரம்ம ரதம், உமா கல்யாணி, சொர்ணவள்ளி பிரசுரம், 15, ஜெய்சங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 105ரூ.

வாக்கையில் நடக்கும் பிரச்சினைகளை பாம்படம் முதல் பொன்னம்மா முடிய 31 தலைப்புகளில் சிறுகதைகளாக வடிவமைத்து உள்ளார் ஆசிரியர் உமாகல்யாணி. ஒவ்வொரு கதையும் படிக்கும்போது அவருடைய நெல்லை மாவட்ட மண் வாசனை வீசுகிறது. உணர்வுகளை வரிவடிவாக்கி, படிப்பவரின் மனங்களை கவரும் வகையில், தமிழ் நாட்டுப்புற பூக்களாக உள்ளன இவரது படைப்புகள். நன்றி: தினத்தந்தி, 17/7/13.  

—-

 

துவாதச உபநிஷத் எனும் பன்னிரு உபநிடதங்கள், பேராசிரியர் நல்லூர் சா. சரவணன், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, விலை 300ரூ.

கடவுள் அல்லது பிரம்மத்தின் தேடல் வரலாற்றை அனைவரும் வியக்கும் வண்ணம் வெளிப்படுத்துகிற ஒரு நூலாகும். ஆன்மிகம் மற்றும் வாழ்க்கை தத்துவத் தேடலுக்கான விடையை நூலாசிரியர் பேராசிரியர் நல்லூர் சா. சரவணன் தொகுத்து அளித்துள்ளார். ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் உள்ள நல்கருத்துக்களை தெளிவுபட நூலாசிரியர் எடுத்துரைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 17/7/13

Leave a Reply

Your email address will not be published.