உள்ளுர் சிவசுப்பிரமணியர் சதகம்

உள்ளுர் சிவசுப்பிரமணியர் சதகம், பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்த பெருமன்றம், விலை 120ரூ. பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6 ஆயிரத்து 666 பாடல்களை அருளி உள்ளார். அவை ஆறு மண்டலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் முதல் மண்டலத்தில் உள்ள பாடல் உள்ளூர்ச் சிவசுப்பிரமணியர் சதகம். இதனை தத்துவ -அனுபவ மரபில் பாடியுள்ளார். இந்த பாடல்களை அனைவரும் படித்து பயன்பெறுவதற்காக நக்கீரன் வழியடிமை புலவர் பி.மா. சோமசுந்தரனார உரையுடன் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more

கம்ப இராமாயணம்-ஓர் அறிமுகம்

கம்ப இராமாயணம்-ஓர் அறிமுகம், பேராசிரியர்-அ.ச. ஞானசம்பந்தன், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 352, விலை 150ரூ. கம்ப ராமாயணத்தை புதிய பார்வையில் ஆய்வு நோக்கில் அலசி ஆராய்ந்தவர் அ.ச. ஞானசம்பந்தன். கோவை கம்பன் அறநிலை வெளியிட்ட கம்பராமாயண நூல்களுக்கு ஆறு காண்டங்களுக்கும், அ.ச. ஞானசம்பந்தன் எழுதிய முன்னுரைகளை தனி நூலாக்கி, கம்பராமாயணத்தை முழுமையாக அறிந்து கொள்ள உதவியிருக்கிறார்கள். பாலகாண்டம் தொடங்கி யுத்த காண்டம் முடிய இன்னும் ஆராய வேண்டிய பகுதிகளைப் பற்றி ஆசிரியர் எடுத்துச் […]

Read more