உள்ளுர் சிவசுப்பிரமணியர் சதகம்

உள்ளுர் சிவசுப்பிரமணியர் சதகம், பேராசிரியர் நல்லூர் சா.சரவணன், சைவ சித்தாந்த பெருமன்றம், விலை 120ரூ. பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6 ஆயிரத்து 666 பாடல்களை அருளி உள்ளார். அவை ஆறு மண்டலங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அதில் முதல் மண்டலத்தில் உள்ள பாடல் உள்ளூர்ச் சிவசுப்பிரமணியர் சதகம். இதனை தத்துவ -அனுபவ மரபில் பாடியுள்ளார். இந்த பாடல்களை அனைவரும் படித்து பயன்பெறுவதற்காக நக்கீரன் வழியடிமை புலவர் பி.மா. சோமசுந்தரனார உரையுடன் தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 9/8/2017.

Read more