டாக்டர் இல்லாத ஊரில்
டாக்டர் இல்லாத ஊரில், இரா. மணிகண்டன், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்கங்கள் 140, விலை 100ரூ.
யந்திர உலகில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை.. இதில் உடலுக்கு எதாவது நோய் வந்தால் டாக்டரிம் போகக்கூட நேரம் கிடைக்கவில்லை என்று சாக்கு சொல்லி தள்ளிப் போடுகிறோம். இந்நிலையில் உடலுக்கு எதாவது என்றால் நீங்கள் மருத்துவரிடம் செல்லும் முன் என்னென்ன செய்ய வேண்டும். உங்களுக்கு நீங்களே வைத்தியம் பார்த்துக் கொள்வது எப்படி? நீங்கள் இருக்கும் இடத்தில் டாக்டர்கள் இல்லாதபட்சத்தில் உங்களுக்கு ஒரு நோய் வந்தால் அதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் நூல்தான் டாக்டர் இல்லாத ஊரில். குமுதம் இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளை குமுதம் பு(து)த்தகம் நூலாக வெளியிட்டிருப்பது, உங்களுக்கு இன்னும் உதவியாக இருக்கும்.
—-
விழி காணும் மொழிகள், சு இலக்குமண சுவாமி, சு. இலக்குமண சுவாமி, 6, வெங்கடேசுவரா நகர், சுந்தர் நகர் விரிவு, திருநகர், மதுரை 6, பக்கங்கள் 106, விலை 65ரூ.
பிறப்பா சாவா தெரியவில்லை… கொடுட்டும் அருவி இந்த ஒரு கவிதை போதும் இலக்கு மண சுவாமியின் கவித்திறனுக்கு. ஏதோ சொற்குவியல்களை அடுக்கி எழுதிவிட்டால் கவிதையாகிவிடும் என்று மலைபோல் எழுதிக் குவிப்பவர் மத்தியில், வாழ்வின் இலக்கை, காலக் கருவியாக, வெளிச்சம் காட்டும் கவிதைகள் இவை. எதுகை, மோனை, எளிய நடை, பாமரனும் புரிந்து கொள்வதை இலக்காகக் கொண்ட கவிமனம் இவையெல்லாம் இக்கவிதைத் தொகுப்பை மேலும் மேலும் வாசிக்கத் தூண்டுகிறது. நன்றி: குமுதம் 06 -02- 2013.
—-
பார்க்கவன் பதை, கே. காசிநாதன், சீதை பதிப்பகம், 10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, பக்கங்கள் 344, விலை 150ரூ.
உடையார்-நயினார்-மூப்பனார் ஆகிய இனத்தைச் சேர்ந்த பார்க்கவ குலமன்னர்கள், மக்கள், கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், கடந்தகாலப் போர்கள், கொடைத்திறன், திருமணத்தொடர்பு ஆகியவற்றை ஆய்வு செய்து நூலாகக் கொணர்ந்துள்ளார் வழக்கறிஞர் வே. காசிநாதன். முதுகபிலர், அவ்வையார், பாணர்கள் பாடிய பாடல்கள், புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, சேர, சோழ, பாண்டியர் வரலாற்று நூல்கள், அண்ணாமலை சதகம் செப்பேடுகள் உள்ளிட்ட வரலாற்று ஆதாரங்களின் துணையோடு பார்க்கவ சமுதாய வரலாற்றைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். நன்றி: குமுதம் 06 -02- 2013.