பிரபல கொலை வழக்குகள்
பிரபல கொலை வழக்குகள், எஸ்.பி.சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை 14.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-787-9.html

நமது நாட்டை உலுக்கிய பல கொலை வழக்குகள் ஒரு மர்ம நாவலைவிட சிக்கல்களும், விநோதங்களும் கொண்டவை. உண்மையில் அந்த கொலை வழக்குகள் முடிந்துபோய்விட்டால்கூட அவை மீண்டும் மீண்டும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன. சென்னை உயர் நீதிமன்றத்தில் 15 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணிபுரிந்த எஸ்.பி.சொக்கலிங்கம், புகழ்பெற்ற 15 கொலை வழக்குகளை அவற்றின் பின்புலத்தோடு விவரிக்கிறார். எம்.ஜி.ஆர் சுடப்பட்ட வழக்கு, சிங்கப்பட்டி கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் சுவாரசியமான நடையில் எழுதப்பட்டுள்ளன. பொதுவாக இதுபோன்ற நூல்களை எழுதும்போது அதில் புனைகதை சார்ந்த அலங்கார நடையை தவிர்ப்பது நல்லது. அது நூலின் நம்பகத்தன்மையை குலைக்கக்கூடும். – மனுஷ்யபுத்திரன், குங்குமம், 08 ஏப்ரல் 2013.