அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி, மும்பை ராமகிருஷ்ணன், எல்கேஎம் பப்ளிகேஷன், 33/4 (15/4), ராமநாதன் தெரு, தி. நகர், சென்னை 17, பக்கங்கள் 544, விலை 290ரூ.

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி நமக்கான மிகப்பெரிய வரப்பிரசாதம். சந்தமும் தாளமும் இணைந்து நம்மை மயக்கிய அந்தப் பாடல்களுக்கான விளக்கங்களை, எளிய நடையில் தந்திருக்கிறார் நூலாசிரியர். நல்ல முயற்சி.  

—-

 

ஸ்ரீ சூரிய புராண வைபவம், நாகர்கோவில் கிருஷ்ணன், பூங்குன்றம் பதிப்பகம், 4/சி, மெர்க்குரி மனைகள், 65, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை 8, பக்கங்கள் 176, விலை 75ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-013-3.html

ஸ்ரீ சூரிய நாராயணருக்கு வந்தனம் செய்வது எப்படி? ஸ்ரீ சூரியனாரின் மகிமை, சூரிய பகவானின் சுயரூபம், சூரிய வம்சம், சூரிய தேவனும் ஜமதக்னி முதலான முனிவர்களும்… என சூரிய பகவானைப் போற்றுகிற அற்புதமான நூல் இது. அத்துடன், ஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம். ஸ்ரீ அப்பய்ய தீட்சிதர் இயற்றிய ஸ்ரீஆதித்ய ஸ்தோத்திரா ரத்னம் ஆகியவற்றையும் இந்த நூலில் தந்திருப்பது சிறப்பு.  

—-

 

விருச்சிகப் பூக்கள், (ஸ்ரீதர்ம்சாஸ்தா புராணம் மற்றும் ஸ்லோகங்கள்), சாஸ்தா பிரசார் பாரதி, மடிப்பாக்கம், சென்னை 91, பக்கங்கள் 78, விலை 60ரூ.

தெய்வத்தின் குரல், முன்ஷி எழுதிய பரசுராம், சைதை சத்குரு சேவா சமிதி மகரமலர், கேளோற்பத்தி, பூத நாத ஸர்வஸ்வம், ஸ்ரீதரன் நாயர் ஆய்வு செய்து செந்தில் துறவி எழுதிய ஸ்ரீ ஐயப்பன் வரலாறு ஆகியவற்றை ஆதார நூல்களாகக் கொண்டு, சாஸ்தா புராணத்தை எளிமையாகவும் அழகாகவும் தந்திருக்கிறார்கள், சாஸ்தா பிரசார் பாரதி அமைப்பினர். அச்சிட்ட விதம் அருமை.. நன்றி: சக்தி விகடன், 19 பிப்ரவரி 2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *