நாடறிந்தோர் வாழ்வில்
நாடறிந்தோர் வாழ்வில், கவிஞர் கா. வேழவேந்தன், சீதை பதிப்பகம், சென்னை, பக். 144, விலை 80ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-0.html கவிதைக்கு என்று ஒரு உயிர் உண்டு சக்தி உண்டு, குணம் உண்டு, மணம் உண்டு இவை அனைத்தும் வேழவேந்தனின் இந்த கவிதைத் தொகுப்பில் உண்டு. தந்தை பெரியாரின் பகுத்தறிவையும், பேரறிஞர் அண்ணாவின் மனித நேயம், பாரதிதாசனின் இன உணர்வு, புத்தர், சாக்கரடீசு, கன்பூசியசு, அலெக்சாண்டர், மாநபியார், ஜி.யூ.போப், வள்ளலார், காந்தியடிகள், பெர்னாட்சா, அன்னை தெரசா, காமராசர், திரு.வி.க., ஆபிரகாம் லிங்கன், ஜீவானந்தம் என்று ஐம்பது அறிஞர்கள் இந்த உலகுக்குத் தந்த அறிவை தமது கவிதை வரிகளால் நம் சிந்தையில் எழுதி உணர்த்திவிட்டுப்போகிறார். சிந்தனைத் தெளிவும், தமிழ் உணர்வும் கவிதைதோறும் உலாவருகின்றன. தமிழை உலகுக்கும் உலகைத் தமிழுக்கும் சொல்லித்தரும் கவிப்பெட்டகம் இந்நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 3/9/2014.
—-
தமிழ் மக்கள் வரலாறு, ஐரோப்பியர் காலம், தமிழ்க்கோட்டம், சென்னை, விலை 150ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-2.html தமிழறிஞர் க.ப. அறவாணன், தமிழ் மக்கள் வரலாற்றை பல்வேறு கட்டங்களாகப் பிரித்து நூலாக எழுதி வருகிறார். இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமது நாட்டை அடிமைப்படுத்தியது, வரலாற்றில் முக்கியமான காலகட்டம். அந்த சமயத்தில் தமிழ்நாடு எவ்வாறு இருந்தது என்பதை, இப்புத்தகத்தில் அறவாணன் விளக்குகிறார். அவர் எவ்வளவு சிரமப்பட்டு உழைத்தும், ஆய்வுகள் செய்தும் இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கமும் புலப்படுத்துகின்றன. அவசியம் படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம். நன்றி: தினத்தந்தி, 27/8/2014.