அஞ்சாத சிங்கம் சூர்யா
அஞ்சாத சிங்கம் சூர்யா, விகடன் பிரசுரம், சென்னை, விலை 100ரூ.
நடிகர் சூர்யா பற்றிய வண்ணமயமான புத்தகத்தை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. படிப்பை முடித்ததும், மாதம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஐவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தவர் சூர்யா. கூச்ச சுபாவம் உடைய அவர் சினிமாவுக்கு வந்ததும், படிப்படியாக உயர்ந்து இப்போது சிகரத்தைத் தொட்டிருப்பதும் நம்பமுடியாத உண்மை. இதுபற்றிய விவரங்களுடன் ஜோதிகாவுடன் காதல் ஏற்பட்டது முதல் குழந்தை பிறந்தபோது வீடியோ படம் எடுத்தது முதலான நிகழ்ச்சிகளையும் சுவைபட விவரித்துள்ளார் சூர்யா. சூர்யா நடித்த படங்களுக்கு விகடன் எழுதிய விமர்சனங்கள் அப்படியே (மார்க்குகளுடன்) பிரசுரிக்கப்பட்டுள்ளன. சூர்யாவின் சீரான வளர்ச்சியை இதன் மூலம் அறிய முடிகிறது. பக்கத்துக்குப் பக்கம் வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. புத்தகத்தை படித்து முடித்ததும், விறுவிறுப்பான சினிமா படம் ஒன்றை பார்த்த உணர்ச்சி எல்லோருக்கும் ஏற்படும் என்பது உறுதி. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.
—–
யாரும் காணாத உலகம், கோவி.லெனின், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 45ரூ.
இயற்கை மீதான காதலையும், சுற்றுச்சூழல் மீதான காதலையும் காதல் கவிதைகள் மூலம் நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார். அதுவும் இந்த பூமியை வருங்கால சந்ததிகளுக்கு பசுமையாகவும், ஈரமாகவும் விட்டுச் செல்லுங்கள் என்ற கோரிக்கையையும் எழுப்பியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 27/8/2014.