காந்தியத் தாயத்து
காந்தியத் தாயத்து, நேசம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ.
நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, உலக மக்கள் இனத்துக்காக வழிகாட்டிய கருணை வள்ளல். சத்தியம், அன்பு, அகிம்சை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் மனப்பாங்கு, எளிமை போன்றவற்றை தன் வாழ்நாள் முழுவதற்குமான நெறிகளாக்கி வாழ்ந்து காட்டிய மனிதப் புனிதர் அவர். காந்தியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை, முனைவர் சுந்தர ஆவுடையப்பன், எளிமையே இனிமை, கோபம் வராத மேன்மை, காந்தியக் கருணை போன்ற 31 தலைப்புகளில் மொழிந்துள்ளார். உலகில் அமைதி, ஊரில் அமைதி, உள்ளத்தில் அமைதி அமைய காந்தியமே ஒரே வழி என்றும் வழி மொழிந்துள்ளார். எளிமையான முறையில் சிறுவர்களுக்கு புரியும் வகையில் சிறுகதைபோல எடுத்துரைக்கும் ஆசிரியரின் பாங்கு பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி.
—-
ஒரு பி.ஆர்.ஓ.வின் இலக்கிய டைரி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
குழந்தை இலக்கியத்துக்கு பெரும் தொண்டாற்றியவர் புதுக்கோட்டை பி.வெங்கட்ராமன். மாணவராக இருந்தபோதே குழந்தைகளுக்காக பத்திரிகை நடத்தியவர். அந்தக் காலக்கட்டத்தில் அவர் பல பிரபல எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகினார். அப்போது ஏற்பட்ட அனுபவங்களை சுவைபடக் கூறுகிறார் இந்த நூலில். நன்றி: தினத்தந்தி.