தேடி வந்த நன்றி
தேடி வந்த நன்றி, உடுமலை நன்னன், சிவா பதிப்பகம், திருப்பூர் மாவட்டம், விலை 100ரூ.
அவள் தந்த பரிசு, கைதியின் மனைவி, செல்லப்பெண், கெட்டிக்காரி போன்று பெண்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 26 கதைகள் இந்நூலில் உள்ளன. இந்த சிறுகதைகள் ஏற்கனவே தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் பல்வேறு வார, மாத இதழ்களில் வெளிவந்தவையாகும். இந்த கதைகள், வாழ்க்கையை நெறிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதால் அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.
—-
விநாயகர், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், சென்னை, விலை 22ரூ.
விநாயகர் பற்றிய அனைத்துத் தகவல்களையும் இந்த சிறு நூலில் திரட்டித் தந்துள்ளார் திருமுருக கிருபானந்தவாரியார். நன்றி: தினத்தந்தி, 27/8/2014.
—-
இஸ்லாம் கூறும் மருத்துவம், டாக்டர் ஹக்கீம் எஸ்.ஏ. சையத் சத்தார், ரப்பானி வைத்தியசாலா வெளியீடு, சென்னை, விலை 50ரூ.
இஸ்லாம் கூறும் மருத்துவக் கருத்துக்களை, இன்றைய நடைமுறைகளோடு ஒப்பிட்டு நூலாசிரியர்இதனை எழுதியுள்ளார். ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும் முறை, தேன் மருத்துவம் பற்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, கோபம் வேண்டாம் போன்ற செய்திகளும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 27/8/2014.