லக்கி லூக்கை சுட்டது யார்?

லக்கி லூக்கை சுட்டது யார்?, ஐம்போ காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. துப்பாக்கி வெடிக்கும் ஓசை, வீழ்ந்து கிடக்கும் லக்கி லூக் என்று புதிய கோணத்தில் தொடங்கி கொலையாளி யார்? காரணம் என்ன? என்ற ப்ளாஷ்பேக்கில் நகரும் கதை. அப்பாவுக்கும் மகன்களுக்கும் இடையே நடக்கும் கொலைவெறி கோல்ட் வேட்டை அது மக்களிடையே பரவி நடக்கும் கரகர சண்டைகள் என்று கதையும் படங்களும் ‘ஜிவ்’வுகின்றன. உச்சக்கட்டத்தில் லக்கிக்கு உயிர் பிழைக்கும் லக் இருந்ததா, இல்லையா? சுட்டது யார்? என்பது யூகிக்க முடியாத சஸ்பென்ஸ், சிரியஸ் […]

Read more

ஒரு விரல் புரட்சி

ஒரு விரல் புரட்சி, அருணன், வசந்தம் வெளியீட்டகம், விலை 150ரூ. ஒற்றைவிரலில் ஒரு துளி மையால் கறைப்படுத்திக் கொண்டு தேர்ந்தெடுத்த நாட்டின் கறையைப் போக்கக்கூடிய கறையில்லா அரசியல் வாதியைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படுவதுதான் தேர்தல். ஆனால், ஜனநாயக நாட்டில் தேர்தலின் நோக்கம் சரியாக நடக்கிறதா? சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரையான தேர்தல் நிகழ்வுகள், வெற்றிக்காக கட்சிகள் வகுத்த வியூகங்கள், அதன் விளைவுகள் என்று சுமார் ஐம்பது ஆண்டுகால இந்திய, தமிழக தேர்தல் குறித்து அலசி ஆய்ந்து எழுதப்பட்ட வரலாறு, ஓட்டுப்போடும் பொது ஜனம் முதல் […]

Read more

அண்டை வீடு

அண்டை வீடு – பயண இலக்கியம், சுப்ரபாரதி மணியன், வெளியீடு: காவ்யா, விலை ரூ.110 பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்குப் போட்டியாக விளங்கும் வங்கதேசத்திற்கு, மேம்பட்டுள்ள பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிலையை ஆய்வு செய்வதற்காக, சென்ற குழுவில் சுப்ர பாரதி மணியன் தனக்கேற்பட்ட வங்கதேச அனுபவங்களை இதில் பகிர்ந்துள்ளார். பின்னலாடை பற்றிய ஆய்வை விட பங்களாதேஷ் எவ்வெவ் வகைகளில் மிகவும் சரிந்து சீர்கேடு அடைந்துள்ளது என்பதை பெரும்பாலான கட்டுரைகளில் விவரித்துள்ளார். நில நடுக்கங்கள், வங்கதேச விடுதலைப் போர்க் குற்றவாளிகள், மோசமான தொழில் என்று அழைக்கப்படும், ‘கப்பல் […]

Read more

எம்.ஜி.ஆர். ஒரு ஜீவ நதி

எம்.ஜி.ஆர். ஒரு ஜீவ நதி, சே ராஜேஸ்வரி வெளியீடு, சந்திரோதயம் பதிப்பகம்,விலை ரூ 200 புரட்சித் தலைவர் எம் ஜி ஆரை வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்துக் காட்டும் நூல்களில் இந்தப் புத்தகம் சிறப்பான இடத்தைப் பிடித்து இருக்கிறது. பெண்கள் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த அபரிதமான மதிப்பு பற்றிய பல செய்திகள் இந்த நூலில் காணப்படுகின்றன. பெண்களுடன் பேசுவதற்கு எம்ஜிஆர் எந்த அளவு கூச்சப் படுவார் என்பது பல சம்பவ சான்றுகளுடன் தரப்பட்டிருக்கின்றன. அதேபோல் எம்ஜிஆர் நடித்த படங்களில் அண்ணன் தங்கை பாசம் எந்த […]

Read more

சங்கீத நினைவலைகள்

சங்கீத நினைவலைகள், வாதூலன், ஜெரல் பப்ளிஷர்ஸ், பக். 220, விலை 140ரூ. ஓய்வு பெற வங்கி அதிகாரியான இந்நூலாசிரியர், சிறுகதைகள், நாடகம், பேட்டிகள், சமூகப் பிரச்னைகள் குறித்த கட்டுரைகள் என்று பல பத்திரிகைகளிலும் எழுதியுள்ளதோடு, அவற்றை தொகுத்து பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இசையை பற்றியும், இசைக்கலைஞர்களைப் பற்றியும் இவர் எழுதிய இரண்டாவது நூல் இது. கர்நாடக இசையில் ஆயிரக்கணக்கான ராகங்கள் உள்ளன என்றும், அவற்றை எல்லாம் முழுமையாக அறியும் இசை ஞானம் தனக்கு இல்லை என்றும் எழுதியுள்ளது எப்படி என்று எண்ணத் […]

Read more

சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம்

சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம், கோ பெரியண்ணன், வனிதா பதிப்பகம், விலை ரூ. 150. ஒழுக்கத்துடன் வாழ்வது, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவற்றைக் கற்றுத் தரும் சாரணர் இயக்கம் பற்றிய முழு விவரத்தை தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. சாரணர் இயக்கத்தின் சிறப்பு சின்னங்களை பெறும் முறை, உற்று நோக்கும் பயிற்சி முதலுதவி சிகிச்சை குழுவுடன் கலந்து பணி செய்தல், செய்கை பேச்சு யோகாசனம் போன்ற பல அம்சங்கள் படங்களுடன் விளக்கிக் கூறப்பட்ட இருக்கின்றன. இந்தியாவில் சாரணர் இயக்கம் முதன் முதலில் எவ்வாறு […]

Read more

இலக்கியத்தில் தேவதாசிகள்

இலக்கியத்தில் தேவதாசிகள், முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை ரூ.165. சிவன் தனது தலை முடியில் உள்ள ஆதிசேடனை நடனமாட சொன்னபோது ஆதிசேடன் தலையிலிருந்து வந்த ஐந்து பேரில் முதலில் வந்தவர்கள் தாசிகள் என்ற தகவலைத் தரும் இந்த நூல் தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இருந்த கணிகையர், நீதிநூல் காலத்து விரைவிலன் மகளிர், நாயக்கர் காலத்து ஆடல் மகளிர் ஆகியோரின் ஒன்றுபட்ட இனம்தான் தேவதாசிகளாக உருமாற்றம் பெற்றன என்ற வரலாற்றுச் செய்தியையும் பதிவு செய்திருக்கிறது. பக்தி இலக்கியங்களிலும் திரை தமிழிலும் தேவதாசிகள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறார்கள் […]

Read more

காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேங்கள்

காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேங்கள், ஸ்ரீதர் சாமா, விருட்சம் வெளியீடு, விலை 90ரூ. காஞ்சி மகா பெரியவரின் கருணை மொழிகளையும் பக்தர்கள் வாழ்வில் அவர் நடத்திய அற்புதங்களையும் சொல்லும் புத்தகம். பலருக்கும் தெரிந்த, தெரியாத விஷயங்களின் தொகுப்பு. படிக்கப் படிக்க சிலிர்க்கிறது. பண்பும் பக்தியும் மனதுக்குள் மலர்கிறது. நன்றி : குமுதம், 25/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உலகவர் போற்றும் முத்தமிழ்

உலகவர் போற்றும் முத்தமிழ், தொகுப்பாசிரியர் மு கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை ரூ. 500 இயல் இசை நாடகம் ஆகிய மூன்று வகை தமிழும் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை அறிந்துகொள்ள உதவும் ஆய்வு நூலாக இந்நூல் காணப்படுகிறது. மூவகை தமிழின் வளர்ச்சி தொடர்பாக அனைத்துலக அளவில் திருச்சியில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட பல அறிஞர்களின் கட்டுரைகள் தொகுப்பு இந்த நூல் இடம் பெற்றிருக்கிறது. தமிழின் பல வகையான நாடகங்கள் கூத்துகள் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடல் கலை சங்க காலம் முதல் […]

Read more

பழைய சோறு

பழைய சோறு, கோமல் அன்பரசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 70ரூ. புதிய கோணம் புதிய தகவல்களுடன் எப்போதும் சுவாரஸ்யம் நிறைந்திருக்கும் கோமல் அன்பரசன் எழுத்தில் பழைய சோறு நூல் உருவாகி இருக்கிறது. பழைய சோறு உணவு என்பதை தாண்டி ஆண்டாண்டு காலமாக நம் வாழ்வியலோடு கலந்த கலாச்சார குறியீடு. இத்தகைய பழைய சோற்றால் உடலுக்கும் மனசுக்கும் கிடைக்கும் நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் தன் சொக்கவைக்கும் நடையில் கவளம் கவளமாக தாயன்போடு நம் கைகளில் தருகிறார்கள். அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் எழுதப் பட்டிருப்பதால் படிப்பவருக்கு பழைய-சோறு […]

Read more
1 2 3 4 9