இலக்கியத்தில் தேவதாசிகள்

இலக்கியத்தில் தேவதாசிகள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை 165ரூ. சிவன் தனது தலை முடியில் உள்ள ஆதிசேடனை நடனமாடச் சொன்ன போது ஆதிசேடன் தலையில் இருந்து வந்த 5 பேரில் முதலில் வந்தவர்கள் ‘தாசிகள்’ என்ற தகவலைத் தரும் இந்த நூல், தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இருந்த கணிகையர், நிதிநூல் காலத்து விரைவின் மகளிர், நாயக்கர் காலத்து ஆடல் மகளிர் ஆகியோரின் ஒன்றுபட்ட இனம்தான் தேவதாசிகளாக உருமாற்றம் பெற்றனர் என்ற வரலாற்றுச் செய்தியையும் பதிவு செய்த இருக்கிறது. பக்தி இலக்கியங்களிலும், திரைத் தமிழிலும் […]

Read more

உலகவர் போற்றும் முத்தமிழ்

உலகவர் போற்றும் முத்தமிழ், மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வகைத் தமிழும் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை அறிந்து கொள்ள உதவும் ஆய்வு நூலாக இந்த நூல் காணப்படுகிறது. மூவகைத் தமிழின் வளர்ச்சி தொடர்பாக அனைத்துலக அளவில் திருச்சியில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட பல அறிஞர்களின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூலில் இடம் பெற்று இருக்கிறது. தமிழின் பலவகையான நாடகங்கள், கூத்துகள், மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் ஆடற்கலை, சங்ககாலம் முதல் தற்காலம் வரையிலான […]

Read more

ரஜினிகாந்த் எனும் காந்தம்

ரஜினிகாந்த் எனும் காந்தம், ஸ்ரீநிதி ஸ்ரீனிவாசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ. சாதாரண நடிகராகத் திரைப்படத் துறையில் நுழைந்து, குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவுக்கு உயர்ந்த ரஜினிகாந்த் பற்றி சுருக்கமாக, அதே சமயம் எதுவும் விட்டுப்போகாத வகையில் எல்லா விவரங்களும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான லிங்கா படம் வரை அவர் நடித்த படங்கள் அத்தனையும் வரிசைக்கிரமாக அதற்கு உரிய படக்காட்சிகளுடனும், ஒவ்வொரு படத்திலும் ரஜினிகாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரம் பற்றிய […]

Read more

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு, பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிரினம் தோன்றியது எவ்வாறு என்பதை ஆய்வு நோக்கிலும், அதே சமயம் அறிவியல் துறையைச் சாராத சாமானியர்களும் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த நூல் தயாராகி இருக்கிறது. உயிரினம் தோன்றியது குறித்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய கருத்துக்கள் முதல் தற்காலத்தில் செயற்கையாக உயிரை மனிதன் படைத்தது வரையிலான தகவல்கள் எளிய நடையில் தரப்பட்டு இருக்கின்றன. மனித செல்கள் பற்றிய டி.என்.ஏ. என்பது […]

Read more

கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள்

கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள், குடவாயில் பாலசுப்ரமணியன், சூரியன் பதிப்பகம்   தமிழகத்தில் பல முக்கியமான கல்வெட்டுகள் இருக்கும் இடங்கள் கோயில்கள். பண்டைத் தமிழ் மன்னர்கள் கோயில்களைக் கட்டியதுடன் தங்களைச் சார்ந்த பல செய்திகளை கல்வெட்டுகளிலேயே பதித்துவைத்தார்கள். கோயில் கல்வெட்டுகள் பகரும் செய்திகள் தொடர்பாக ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தொல்தமிழ் எழுத்துகள் ஓர் அறிமுகம்

தொல்தமிழ் எழுத்துகள் ஓர் அறிமுகம், செந்தீ நடராசன், என்.சி.பி.எச்.   இந்தியாவிலேயே அதிகக் கல்வெட்டுகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஆவணப் படுத்துதலில் மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழ் தொன்மையானது. கீழடிச் சான்றுகளும் அதையே நமக்கு உணர்த்துகின்றன. இந்தப் பின்னணியில் தொல்தமிழ் எழுத்துகள், அவை கூற நினைக்கும் செய்திகளை இந்த நூலின் வழியாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார் மூத்த சமூகப் பண்பாட்டு ஆய்வாளர் செந்தீ நடராசன்.   நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

முச்சந்தி இலக்கியம்

முச்சந்தி இலக்கியம், ஆ.இரா. வெங்கடாசலபதி, காலச்சுவடு, விலை 140ரூ.   புலவர்களும் இலக்கிய ஆளுமைகளும் படைப்பவை மட்டுமே இலக்கியம் என்றொரு மூடநம்பிக்கை இருக்கிறது. சாதாரண மக்களும் அதிகம் அறியப்படாத படைப்பாளர்களும் உலகின் எல்லா நிலப்பகுதிகளிலும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். தாங்கள் வாழ்ந்த காலத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளை அவர்களும் எளிய முறையில், மக்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் படைப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட எளியோர் இலக்கியம் குறித்த நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000000581.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சென்னப்பட்டணம்

சென்னப்பட்டணம், ராமச்சந்திர வைத்தியநாத்,பாரதி புத்தகாலயம்   ஆங்கிலேயர் வருகைக்குப்பின் தமிழகத்தின் வடகிழக்கு முனையில் உள்ள கடலோர நகரமான சென்னை, முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதன் தொடக்க காலம் தொட்டு சென்னையை வளர்த்தெடுத்தவர்கள், உழைக்கும் ஏழை, எளிய மக்கள். இந்தப் பின்னணியில் சென்னை நகரின் வளர்ச்சியை பின்தொடர்கிறது இந்த நூல்.   நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

சினிமா ரசனை

சினிமா ரசனை, அம்ஷன்குமார், சொல் ஏர் பதிப்பகம், விலை 275ரூ. தமிழ்நாட்டில் சினிமா ரசனை பெரிதாக வளர்ந்திராத காலத்தில், அயல் சினிமாவையும் நம் சினிமாவையும் புரிந்துகொள்வது எப்படி, அவற்றின் கலைநுட்பங்கள், தன்மை குறித்துத் தொடர்ச்சியாக எழுதிவந்தவர் இயக்குநர் அம்ஷன்குமார். மகாகவி பாரதி, சர் சி.வி.ராமன் குறித்த அவருடைய ஆவணப் படங்கள் குறிப்பிடத்தக்கவை. 20 ஆண்டுகளுக்கு முன்பே அவர் எழுதிய நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000022755.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

பச்சை நிழல்

பச்சை நிழல், உதயசங்கர், என்.சி.பி.எச்., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 60ரூ. தண்ணீரே இல்லாத ஒரு திடலில் ஒரு புல் முளைக்கிறது. அந்தப் புல்லை இரண்டு சிறுமிகள் கவனமாகப் பார்த்துக்கொள்வதே இந்த நூலின் தலைப்புக்கதை. இதேபோல் சமூகத்தில் நிலவும் பல்வேறு விஷயங்களைப் பற்றிய கதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. நன்றி: தமிழ் இந்து, 27/11/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/product.php?productid=32735&page=1 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 4 5 6 9